பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளே தேனீ வளர்க்க ஆசையா

Added : செப் 12, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-'ரெட்டியார்சத்திரம் விவசாயிகளே தேனீ பெட்டி வேணுமா தோட்டக்கலையை அணுகுங்கள்' என, உதவி இயக்குனர் செல்வக்குமார் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: தேனீ வளர்ப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்தும். தோட்டக்கலை பயிர்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் அதிக மகசூல் பெற வழி செய்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது. தேனீ வளர்ப்பின் மூலம் தேன்,

திண்டுக்கல்-'ரெட்டியார்சத்திரம் விவசாயிகளே தேனீ பெட்டி வேணுமா தோட்டக்கலையை அணுகுங்கள்' என, உதவி இயக்குனர் செல்வக்குமார் தெரிவித்தார்.அவர் தெரிவித்தது: தேனீ வளர்ப்பு சுற்றுச்சூழலை மேம்படுத்தும். தோட்டக்கலை பயிர்களில் மகரந்த சேர்க்கைக்கு உதவுவதால் அதிக மகசூல் பெற வழி செய்கிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படுகிறது. தேனீ வளர்ப்பின் மூலம் தேன், தேன் மெழுகு என பல பொருட்கள் கிடைப்பதால் அதன் மூலமாகவும் லாபம் பெறலாம். தேனீக்களை வளர்ப்பது மனச்சோர்வை நீக்கி புத்துணர்ச்சி தரும்.ஒரு பொழுதுபோக்காகவும், நல்ல லாபகரமான தொழிலாகவும் திகழ்வதால், தற்போது விவசாயிகள் ஆர்வமுடன் தேனீக்களை வளர்க்கின்றனர். பலக்கனுாத்து, கே.புதுக்கோட்டை, கசவனம்பட்டி, குருநாதநாயக்கனுார், சுள்ளெறும்பு கிராமங்களுக்கு கிராம மகத்துவ திட்டத்தில் தலா 1000 தேனீ பெட்டிகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆர்வமுள்ள விவசாயிகள் தோட்டக்கலை அலுவலகத்தை அணுகலாம், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X