சித்தராமையா, சிவக்குமார் மீது காங்., கவுன்சிலர்கள் புகார்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சித்தராமையா, சிவக்குமார் மீது காங்., கவுன்சிலர்கள் புகார்

Added : செப் 12, 2021
Share
பெங்களூரு : கலபுரகி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற, பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள், சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் மீது ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.கலபுரகி மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க முடியாமல் பா.ஜ., காங்கிரஸ் திணறி

பெங்களூரு : கலபுரகி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்ற, பத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள், சித்தராமையா, சிவகுமார் ஆகியோர் மீது ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் புகார் செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கலபுரகி மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் முழு பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைக்க முடியாமல் பா.ஜ., காங்கிரஸ் திணறி வருகிறது.ம.ஜ.த.,வின் ஆதரவு யாருக்கு கிடைக்கிறதோ அந்த கட்சி தான் மாநகராட்சியை கைப்பற்றும். அக்கட்சி கவுன்சிலர்கள் நான்கு பேர், பெங்களூரு அருகே உள்ள சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.இதற்கிடையில், பத்துக்கும் அதிகமான காங்கிரஸ் கவுன்சிலர்கள் திடீரென பெங்களூரு வந்துள்ளனர். சதாசிவநகரில் உள்ள வீட்டில் ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து பேசினர்.இதனால், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில தலைவர் சிவகுமார் அதிருப்தி அடைந்துள்ளனர். ஆனால், இருவருமே தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற மறுப்பதாக, கார்கேவிடம் புகார் செய்துள்ளனர்.மேயர், துணை மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டால், அடுத்த கட்டமாக என்ன செய்வதென்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. ம.ஜ.த.,வினர் காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிப்பர் என்ற நம்பிக்கையில், கார்கே உள்ளார். இது குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடாவிடம் ரகசிய பேச்சு நடத்தியுள்ளார். யாருக்கு ஆதரவளிக்க வேண்டும் என முடிவு செய்யும் அதிகாரத்தை, குமாரசாமிக்கு, தேவகவுடா அளித்துள்ளார். இதனால், அவருடன் கவுன்சிலர்கள், ஆலோசனை நடத்தினர். ராம்நகரில் குமாரசாமி வீட்டில் நடந்த, விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்ற பின், பெங்களூரு வந்து தங்கியுள்ளனர். மாநகராட்சியில், தொங்கு நிலை ஏற்பட்டதால், மேயர், துணை மேயர் தேர்தல் எப்போது நடக்கும், எந்த கட்சி, மாநகராட்சி ஆட்சியில் அமரும் என்ற கேள்வி எழுந்துள்ளது. வரும் 13க்கு பின், கலபுரகி மேயர், துணை மேயர் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது.ம.ஜ.த., சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் நாசிர் ஹூசேன் கூறுகையில், ''ஏற்கனவே எங்கள் தீர்மானத்தை தெரிவித்துள்ளோம். யார் எங்களின் கோரிக்கைக்கு சம்மதிக்கின்றனரோ, அந்த கட்சி மாநகராட்சி ஆட்சியில் அமரும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X