பொது செய்தி

தமிழ்நாடு

3653 வழக்குகளுக்கு ரூ.8.88 கோடிக்கு தீர்வு

Added : செப் 12, 2021
Share
Advertisement
திண்டுக்கல்-- -திண்டுக்கல்லில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 653 வழக்குகளுக்கு ரூ.8.88 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் 10 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. திண்டுக்கல்லில் மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவர் புவனேஷ்வரி முன்னிலை வகித்தார். சார்பு நீதிபதிகள்

திண்டுக்கல்-- -திண்டுக்கல்லில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 653 வழக்குகளுக்கு ரூ.8.88 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் 10 அமர்வுகளாக தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. திண்டுக்கல்லில் மாவட்ட நீதிபதி ஜமுனா தலைமை வகித்தார். நிரந்தர மக்கள் நீதிமன்றம் தலைவர் புவனேஷ்வரி முன்னிலை வகித்தார். சார்பு நீதிபதிகள் மீனாசந்திரா, செல்வக்குமார், பாரதிராஜா, நீதிபதிகள் சாமுண்டிஸ்வரிபிரபா, லலிதாராணி, தமிழரசி, ஆனந்தவள்ளி, கார்த்திகேயன், முல்லைவாணன் பங்கேற்றனர். இதில் வங்கி வராக்கடன் வழக்குகள் 251, நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் 3 ஆயிரத்து 402 என மொத்தம் 3 ஆயிரத்து 653 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு ரூ.8 கோடியே 88 லட்சத்து 93 ஆயிரத்து 112 இழப்பீடு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X