பொது செய்தி

தமிழ்நாடு

காதலனை பிரிய மறுத்து ரோட்டில் ஓடிய பெண்

Added : செப் 12, 2021
Share
Advertisement
வடமதுரை--வடமதுரையில் திருமண வயதை எட்டாத வாலிபருடனே வாழ்வேன் என பிடிவாதம் செய்து ரோட்டில் ஓடிய தூத்துக்குடி பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.அய்யலூர் களர்பட்டி சுந்தர் 20, தூத்துக்குடி வினிதா 18, காதலித்தனர். இந்நிலையில் வினிதா தூத்துக்குடியில் இருந்து மாயமாகி சுந்தர் வீட்டிற்கு வந்தார். பெண்ணின் பெற்றோர் தூத்துக்குடி போலீசில் புகார் செய்து தேடி வந்தனர். சுந்தர்

வடமதுரை--வடமதுரையில் திருமண வயதை எட்டாத வாலிபருடனே வாழ்வேன் என பிடிவாதம் செய்து ரோட்டில் ஓடிய தூத்துக்குடி பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.அய்யலூர் களர்பட்டி சுந்தர் 20, தூத்துக்குடி வினிதா 18, காதலித்தனர். இந்நிலையில் வினிதா தூத்துக்குடியில் இருந்து மாயமாகி சுந்தர் வீட்டிற்கு வந்தார். பெண்ணின் பெற்றோர் தூத்துக்குடி போலீசில் புகார் செய்து தேடி வந்தனர். சுந்தர் தரப்பினர் இருவரையும் வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர். சுந்தரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஆணின் திருமண வயது 21 பூர்த்தியாகாததை கூறி பிரிய சம்மதம் பெற்று அவரை வீட்டிற்கு அனுப்பினர்.ஆனால் வினிதா இதனை ஏற்காமல், சுந்தரோடு தான் வாழ்வேன் என பிடிவாதமாக சத்தமிட்டு, திடீரென ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் ஓடினார். உறவினர்கள் வினிதாவை விரட்டிச் சென்று பிடித்தனர். போலீசார் நீண்ட நேரம் வினிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சட்டப் பிரச்னைகளை எடுத்துக் கூறி சமரசம் செய்து பெற்றோருடன் தூத்துக்குடிக்கு அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X