நாளை சட்டசபை கூட்டத்தொடர்ஜார்கி ஹோளி பிரதர்ஸ் ஆப்சென்ட்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாளை சட்டசபை கூட்டத்தொடர்ஜார்கி ஹோளி பிரதர்ஸ் 'ஆப்சென்ட்'

Added : செப் 12, 2021
Share
பெங்களூரு : சட்டசபை கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை அரசுக்கு, முதல் கூட்டத்தொடர். இதில் பங்கேற்க வேண்டாம் என, ஜார்கி ஹோளி சகோதரர்கள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் எடியூரப்பா அரசில், நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி, ஆபாச வீடியோ வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இதனால் அவர் அமைச்சர் பதவியை

பெங்களூரு : சட்டசபை கூட்டத்தொடர் நாளை துவங்குகிறது. முதல்வர் பசவராஜ் பொம்மை அரசுக்கு, முதல் கூட்டத்தொடர். இதில் பங்கேற்க வேண்டாம் என, ஜார்கி ஹோளி சகோதரர்கள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் எடியூரப்பா அரசில், நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி, ஆபாச வீடியோ வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.இதனால் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். ஆபாச வீடியோ வழக்கை மாநில அரசு சிறப்பு விசாரணை குழுவிடம் ஒப்படைத்தது. வழக்கு இன்னும் முடிவடையவில்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை கட்டத்தில் உள்ளது. இதற்கிடையில், மாநிலத்தில் முதல்வர் மாற்றம் நடந்து, பசவராஜ் பொம்மை முதல்வரானார். புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டும் ரமேஷ் ஜார்கிஹோளிக்கு, அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. இவருக்கு பதவி கொடுப்பதில் அரசுக்கோ, பா.ஜ., தலைவர்களுக்கோ, ஆர்வம் இருப்பதாக தெரியவில்லை.

தனக்கு பதவி இல்லையென்றாலும், தன் சகோதரர் பாலசந்திர ஜார்கிஹோளிக்காவது, அமைச்சர் பதவி வழங்கும்படி நெருக்கடி கொடுத்தும் பயனில்லை. தங்களுக்கு ஆதரவாக பா.ஜ., தலைவர்கள் குரல் கொடுக்கவில்லை என ஜார்கிஹோளி சகோதரர்கள் அதிருப்தியில் உள்ளனர்.வரும் 13 முதல் துவங்கும் சட்டசபை கூட்டத்திலும் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X