அரசியல் செய்தி

தமிழ்நாடு

-பாலையூர் கோவிலில் 16ல் கும்பாபிஷேகம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே பாலையூரில் அமைந்து உள்ள, லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பாலையூர் கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள், கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ பரமாச்சார்யார் சுவாமிகள்
 -பாலையூர் கோவிலில்  16ல் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே பாலையூரில் அமைந்து உள்ள, லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வரும் 16ம் தேதி நடக்கிறது.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா பாலையூர் கிராமத்தில் லட்சுமி நாராயண பெருமாள், கோதண்டராம சுவாமி கோவில் உள்ளது. பழமை வாய்ந்த கோவிலில் திருப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ பரமாச்சார்யார் சுவாமிகள் அனுகிரகத்துடன் வரும் 16ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது.

வரும் 14ம் தேதி ஆச்சாரிய அழைப்புடன் யாகசாலை பூஜைகள் துவங்குகிறது. 16ம் தேதி காலை நான்காம் கால யாகசாலை விசேஷ பூஜைகள், பூர்ணாஹூதி நடைபெற்று கோவில் விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் மூலவர் மகா அபிஷேகம் நடக்கிறது.அன்று மாலை 5:00 மணிக்கு சீதாராம திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை பக்தர்கள் இணையதளம் வாயிலாக தரிசிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X