பொது செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி சுடும் பயிற்சி: கிராமத்தினருக்கு எச்சரிக்கை

Added : செப் 12, 2021
Share
Advertisement
வடமதுரை-வடமதுரை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுவதால் கிராமத்தினருக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.புத்துார் ஊராட்சி பண்ண மலை சரிவில் போலீசாரின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டிற்கு ஒன்று அல்லது இரு முறை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது செப்.22 வரை நடக்கவிருக்கும்

வடமதுரை-வடமதுரை அருகே போலீசாருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுவதால் கிராமத்தினருக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டது.புத்துார் ஊராட்சி பண்ண மலை சரிவில் போலீசாரின் துப்பாக்கி சுடும் பயிற்சி தளம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆண்டிற்கு ஒன்று அல்லது இரு முறை போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது செப்.22 வரை நடக்கவிருக்கும் பயிற்சியை எஸ்.பி., ஸ்ரீனிவாசன் துவக்கி வைத்தார். டி.எஸ்.பி., மகேஷ், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,கள் பங்கேற்றனர்.இதற்காக புத்துார் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றுப்பகுதி கிராமங்களில் செய்யப்பட்ட தண்டோரா அறிவிப்பில், துப்பாக்கி சுடும் பயிற்சி தினமும் காலை 6:00 முதல் 10:00 மணி வரை நடப்பதால், அந்த நேரத்தில் இப்பகுதிக்கு ஆடு, மாடு மேய்க்கவோ அல்லது வேறு காரணத்திற்காகவே அப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம் என, கிராமத்தினர் எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X