பொது செய்தி

இந்தியா

பணம் பெறாமல் பா.ஜ.,வில் இணைந்தேன்; முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல்

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பெங்களூரு : ''காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தால் பணம் தருவதாக கட்சி தலைவர்கள் கூறியது உண்மை். எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டனர். பணம் பெறாமல் பா.ஜ.,வில் இணைந்தேன்,'' என முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல், பழைய அரசியல் சாயத்துக்கு புதிய குண்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.கர்நாடகாவில், 2019 ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது, காங்கிரஸ், ம.ஜ.த.,வை

பெங்களூரு : ''காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தால் பணம் தருவதாக கட்சி தலைவர்கள் கூறியது உண்மை். எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டனர். பணம் பெறாமல் பா.ஜ.,வில் இணைந்தேன்,'' என முன்னாள் அமைச்சர் ஸ்ரீமந்த் பாட்டீல், பழைய அரசியல் சாயத்துக்கு புதிய குண்டு போட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கர்நாடகாவில், 2019 ல் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் போது, காங்கிரஸ், ம.ஜ.த.,வை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.,க்கள் அக்கட்சிகளிலிருந்து விலகினர்.அப்போது காங்கிரசை சேர்ந்த பெலகாவி மாவட்டம் காக்வாடா சட்டசபை எம்.எல்.ஏ.,வாக இருந்த ஸ்ரீமந்த் பாட்டீலும் விலகி பா.ஜ.,வில் இணைந்தார்.எடியூரப்பா ஆட்சியில், ஜவுளி துறை அமைச்சராகவும் இருந்தார். பசவராஜ் பொம்மை ஆட்சியில் மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்து கிடைக்கவில்லை. இதனால் பா.ஜ., தலைவர்கள் மீது கடும் அதிருப்தியில் இருந்தார்.இந்நிலையில், காக்வாடின் ஐநாபுரத்தில் ஸ்ரீமந்த் பாட்டீல் நேற்று கூறியதாவது:காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.,வில் இணைந்தால் பணம் தருவதாக கட்சி தலைவர்கள் கூறியது உண்மை். எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டனர். ஒரு பைசா கூட வாங்க மாட்டேன்; ஆட்சி அமைந்த பின் நல்ல பதவி தாருங்கள்; மக்கள் சேவை ஆற்றுவேன் என்று கூறியிருந்தேன். பணம் பெறாமல் பா.ஜ.,வில் இணைந்தேன்.நான் 20 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறேன். விவசாய துறை வழங்கினால் சிறப்பாக செயல்படுவேன் என்று கூறியிருந்தேன். ஆனால், ஜவுளி துறை வழங்கினர். அதையும் சிறப்பாக நிர்வகித்தேன்.ஆனால், எதற்காக தற்போது அமைச்சர் பதவி வழங்கவில்லை என்று தெரியவில்லை. விரிவாக்கம் செய்யும் போது கண்டிப்பாக வாய்ப்பு தரப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை உறுதியளித்துள்ளார். விவசாய துறை வழங்கினால் மக்களுக்கு சேவை புரிவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
12-செப்-202114:24:13 IST Report Abuse
vpurushothaman ஓ அப்படி ஒரு பழக்கம் உண்டோ ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X