சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மொபைல் போனில் பேசி ரூ.50 ஆயிரம் மோசடி

Added : செப் 12, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா அலுவலக சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் மணிராஜ், 41; விவாகரத்தானவர். இவர், இரண்டாவது திருமணத்துக்கு இணையதளத்தில் பதிவு செய்தார். அவரது மொபைல் போனில் பேசிய பெண், தன் பெயர் சோனியா ரிச்மண்ட் என்றும், ஸ்காட்லாந்தில் இருந்து பேசுவதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். பின், 'வீடியோ காலில்'

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா அலுவலக சாலையில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருபவர் மணிராஜ், 41; விவாகரத்தானவர்.

இவர், இரண்டாவது திருமணத்துக்கு இணையதளத்தில் பதிவு செய்தார். அவரது மொபைல் போனில் பேசிய பெண், தன் பெயர் சோனியா ரிச்மண்ட் என்றும், ஸ்காட்லாந்தில் இருந்து பேசுவதாகவும், திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். பின், 'வீடியோ காலில்' பேச அப்பெண் கூற, மணிராஜும் பேசியுள்ளார்.

அப்போது அப்பெண், தனக்கு அவசரமாக, 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கூறியுள்ளார். உடனடியாக அவரின் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பிய மணிராஜ், தகவலை கூற சோனியாவுக்கு போன் செய்த போது, 'சுவிட்ச் ஆப்' ஆகியிருந்தது. மணிராஜ் அளித்த புகார்படி, கிருஷ்ணகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X