சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திராவிட இயக்கங்களுக்கு ஓட்டளித்து பலன் இல்லை: இமானுவேல்சேகரன் மகள் வேதனை

Added : செப் 12, 2021
Share
Advertisement
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று இமானுவேல் சேகரன் 64 வதுநினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக அவரது மகள் பிரபாராணி அவரது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.அவர் கூறியதாவது: அப்பா நினைவு நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும், மணிமண்டபம் கட்டித்தர வேண்டும் என திராவிட இயக்கங்களிடம் மாறி, மாறி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் கோரிக்கை வைக்கிறோம். எங்கள்

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நேற்று இமானுவேல் சேகரன் 64 வதுநினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. முன்னதாக அவரது மகள் பிரபாராணி அவரது குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்தினர்.

அவர் கூறியதாவது: அப்பா நினைவு நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும், மணிமண்டபம் கட்டித்தர வேண்டும் என திராவிட இயக்கங்களிடம் மாறி, மாறி ஆட்சிக்கு வரும்போது எல்லாம் கோரிக்கை வைக்கிறோம். எங்கள் சமுதாய மக்கள் தி.மு.க., விற்கு அதிகளவில் ஓட்டளித்துள்ளனர்.62வது நினைவு நாளில் பரமக்குடி வந்த முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த உடன் வேறு மாதிரி பேசுகின்றனர்.

நேரில் அழைப்பிதழ் கொடுக்க சந்திக்க சென்றபோது கூட மரியாதை தரவில்லை. மத்திய அரசு தேசியத்தலைவர் என தபால் தலை வெளியிட்டுள்ளது. நடப்பு சட்டசபை கூட்டத் தொடரில் மணிமண்டபம் கட்டுவது, அரசு விழாவாக நடத்துவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்.

தேவேந்திர சமுதாயத்தை சேர்ந்தவருக்கு மேலவை உறுப்பினர் பதவி வழங்கி அங்கீகாரம் தர வேண்டும்,' இவ்வாறு அவர்கூறினார்.

* பரமக்குடிக்கு வந்த போக்குவரத்து அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறுகையில், இமானுவேல் சேகரன் நினைவுநாளை அரசு விழாவாக, மணிமண்டபம் கட்டுவது முதல்வர் முடிவு செய்வார். தேவேந்திர குல மக்களை புறக்கணிக்கமாட்டோம்,'என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X