பொது செய்தி

இந்தியா

நான்கு பேரின் அலப்பரை

Added : செப் 12, 2021
Share
Advertisement
ராஜ உபச்சாரம்!கல்புர்கியில் ஜெயிச்ச நான்கே பேரின் அலப்பரை தாங்கலையாம்.அந்த நான்கு பேரை விடுதிக்கு வரவழைச்சி ராஜ மரியாதையுடன் கவனிப்பு நடக்குது. இந்த நான்கு பேரில் ஒருத்தருக்கு மேயர் பதவி தரனும்னு 'டிமாண்ட்' செய்து வராங்க.கொஞ்சம் பிடியை தளர்த்தி துணை மேயர் பதவிக்கு பரிசம் போட தயாராயிட்டாங்களாம். நிலைக்குழுவுக்கு 2 சேர்மன் பதவி வழங்கணுமுன்னு வேறு உணர்த்தி

ராஜ உபச்சாரம்!கல்புர்கியில் ஜெயிச்ச நான்கே பேரின் அலப்பரை தாங்கலையாம்.அந்த நான்கு பேரை விடுதிக்கு வரவழைச்சி ராஜ மரியாதையுடன் கவனிப்பு நடக்குது. இந்த நான்கு பேரில் ஒருத்தருக்கு மேயர் பதவி தரனும்னு 'டிமாண்ட்' செய்து வராங்க.கொஞ்சம் பிடியை தளர்த்தி துணை மேயர் பதவிக்கு பரிசம் போட தயாராயிட்டாங்களாம்.

நிலைக்குழுவுக்கு 2 சேர்மன் பதவி வழங்கணுமுன்னு வேறு உணர்த்தி வராங்க.'மாஜி' முதல்வர் அரவணைப்பில் ஏகபோகமா ஜாலியா இருக்காங்களாம்.நான்கு பேரும் யாரை ஆதரிக்கனுமான்னு இன்னும் முடிவாகலையாம்.பணமெல்லாம் கரையுதாம்!மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவிக்காலம் முடிஞ்சி, ஒரு வருஷம் கடந்து போச்சு.அடுத்த தேர்தலுக்கு தயாரா இருந்த பழைய கவுன்சிலர்களும், புதுசா போட்டிப்போட இருப்பவங்களும், ஓட்டுக்கு ஆளுங்களை பிடிக்க ஒரு வருஷமா செலவு செய்திருக்கிற பணமெல்லாம் கரைஞ்ச படியே இருக்குது.

ஆனால், தேர்தல் வந்த பாடில்லை.தேர்தல் நடத்துற எண்ணமே இல்லாமல் ஆளும் கட்சி, காலத்தை ஓட்டுது. மாநகராட்சி தேர்தலுக்கு ரெட்டிப்பான வெட்டியான செலவு அதிகரிப்பை தவிர்க்க முடியலையேன்னு கண்ணை கசக்குறாங்க. மனசுக்குள்ளே அங்கலாய்க்கிறாங்க.ஆபீசர்களுக்கு மிரட்டல்!நம்ம மாநிலத்தில அரசியல் தலைவர்களோட துாண்டுதலில் தான் ஒரு சில பெரிய ஆபிசருங்களும் முறைகேடுகளுக்கு துணை போனாங்களாம்.

ஆனால், சில அரசியல்வாதிகள் தான் ஆபிசர்கள் பேரில் பல குற்றச்சாட்டுகளை அடுக்குறாங்க. நேர்மையான ஆபிசரா இருந்தவர்களையும் வீதியில் கேவலப்படுத்துறாங்கன்னு அதிகாரிகள் கடுப்பில் இருக்காங்களாம். அதிகபட்சமா ஆபிசர்களை இடம் மாற்றம் தவிர வேறென்ன செய்திட முடியும்னு சவாலை சமாளிக்க போறாங்களாம். பல மாவட்ட ஆபிசர்கள் அரசியல்வாதிகளால் தொடர்ந்து தொல்லையை அனுபவிக்கிறாங்களாம்.வேட்டையாட விளையாடுறாங்க!சிட்டி விஜயநகர் தொகுதியில கைக்கார எம்.எல்.ஏ.,வாக இருந்தவரு, கடந்த தேர்தலில் தோல்வி அடைஞ்சாரு. அவரை எதிர்த்து, ஜெயித்து மந்திரியா இருப்பவரை அடுத்த தேர்தலில் வீழ்த்த 'மாஜி' இப்பவே கோதாவில் இறங்கிட்டாராம்.

இவரோட 'லே அவுட்' நைனாவும் ஒண்ணா இணைந்து மந்திரிக்கு எதிரா பலத்தை காட்ட, மக்கள் மத்தியில் நடமாட துவங்கிட்டாங்க. ஏழை, நடுத்தர மக்களோட அத்தியாவசிய தேவைக்கான உதவியை வீட்டுக்கு கொண்டு போய் சேர்க்குறாங்களாம். அடுத்த தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருஷம் இருக்கு. அதற்குள்ளாகவே சிலிகான் சிட்டியின் விஜயநகர் பகுதியில் வேட்டையாட விளையாடுறாங்க.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X