வருங்கால வைப்பு நிதி மோசடி: தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிக்கினர்| Dinamalar

வருங்கால வைப்பு நிதி மோசடி: தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகள் சிக்கினர்

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (6)
Share
புதுடில்லி-தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து 2.71 கோடி ரூபாய் மோசடி செய்த, தமிழகத்தில் பணியாற்றி வந்த இரண்டு அதிகாரிகள் உட்பட மூன்று பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.நம் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில், ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து தவித்தனர். அப்போது, இ.பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால

புதுடில்லி-தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து 2.71 கோடி ரூபாய் மோசடி செய்த, தமிழகத்தில் பணியாற்றி வந்த இரண்டு அதிகாரிகள் உட்பட மூன்று பேர் மீது, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்துள்ளது.latest tamil news


நம் நாட்டில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில், ஏராளமானோர் தங்கள் வேலைகளை இழந்து தவித்தனர். அப்போது, இ.பி.எப்.ஓ., எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருந்து தங்கள் பணத்தை எடுத்துக்கொள்ள, ஊழியர்களுக்கு மத்திய அரசு சலுகை செய்திருந்தது.இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் முதல், ஜூன் வரையிலான காலத்தில் இந்த சலுகை இருந்தபோது, இ.பி.எப்.ஓ., அமைப்பின் அதிகாரிகள் மூன்று பேர், 2.71 கோடி ரூபாயை கையாடல் செய்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுஉள்ளது.

மஹாராஷ்டிராவின் காண்டிவலி பகுதியில் இயங்கும் மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்த மூத்த அதிகாரி சந்தன் குமார் சின்ஹா, இதில் முக்கிய குற்றவாளியாக உள்ளார். இவருடன், தமிழகத்தின் கோவை மற்றும் சென்னையில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றி வந்த உத்தம் தகாரே மற்றும் விஜய் ஜார்பே ஆகியோரும் பணத்தை கையாடல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது.


latest tamil news


இந்நிலையில் கடந்த மாதம் இ.பி.எப்.ஓ., அமைப்பு அளித்த புகார் அடிப்படையில், குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து, சி.பி.ஐ.,அதிகாரிகள் விசாரணையை துவக்கி உள்ளனர்.புலம்பெயர் தொழிலாளர்களின் தரவுகளை பயன்படுத்தி இவர்கள் மோசடியில் ஈடுபட்டது, விசாரணையில் அம்பலமாகி உள்ளது.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X