பொது செய்தி

இந்தியா

தேர்தலுக்கு தயாராகும் ம.ஜ.த.,

Added : செப் 12, 2021
Share
Advertisement
மைசூரு : கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு, இப்போதிருந்தே ம.ஜ.த., தயாராகிறது. தேவகவுடா, குமாரசாமி தொடர் கூட்டங்கள் நடத்துகின்றனர். கட்சியை விட்டு செல்வோரை, தக்க வைத்து கொள்ளவும், முயற்சி நடக்கிறது. குறிப்பாக ஜி.டி.தேவகவுடா, ம.ஜ.த.,வை விட்டு செல்லாமல் தடுக்க, தேசிய தலைவர் தேவகவுடா ஆர்வம் காண்பிக்கிறார். அதிருப்தி ம.ஜ.த., தொண்டர்கள், தலைவர்களுடன், தொடர் கூட்டம் நடத்தும் குமாரசாமி,

மைசூரு : கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு, இப்போதிருந்தே ம.ஜ.த., தயாராகிறது. தேவகவுடா, குமாரசாமி தொடர் கூட்டங்கள் நடத்துகின்றனர். கட்சியை விட்டு செல்வோரை, தக்க வைத்து கொள்ளவும், முயற்சி நடக்கிறது.

குறிப்பாக ஜி.டி.தேவகவுடா, ம.ஜ.த.,வை விட்டு செல்லாமல் தடுக்க, தேசிய தலைவர் தேவகவுடா ஆர்வம் காண்பிக்கிறார். அதிருப்தி ம.ஜ.த., தொண்டர்கள், தலைவர்களுடன், தொடர் கூட்டம் நடத்தும் குமாரசாமி, கட்சியில் இருந்தும், கட்சிக்காக பணியாற்றாதவர்கள் மீது அதிருப்தி தெரிவித்துள்ளார். கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபடுங்கள். இல்லையென்றால், இளைஞர்களை முன்னிலைக்கு கொண்டு வருவேன்' என, எச்சரித்துள்ளார். மைசூரு பகுதியின் செல்வாக்கு மிக்க தலைவரும், ஒரு காலத்தில் தேவகவுடாவுக்கு, நெருக்கமாக இருந்தவருமான ஜி.டி.தேவகவுடா, ம.ஜ.த.,வை விட்டு வெளியேறி, காங்கிரசில் இணைவதாக அறிவித்துள்ளார்.நிபந்தனைஆனால் இவர் கட்சியை விட்டு செல்வதில், தேசிய தலைவர் தேவகவுடாவுக்கு விருப்பமில்லை. இரு நாட்களுக்கு முன், ஜி.டி.தேவகவுடாவை, மாண்டியாவின் ரகசிய இடத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவர், ம.ஜ.த.,வில் நீடிப்பதற்கு, சில நிபந்தனைகள் விதித்ததாக கூறப்படுகிறது. காங்கிரசில் சேர வேண்டுமானால் தனக்கும், தன் மகன் ஹரிஷ் கவுடாவுக்கும், அடுத்த சட்டசபை தேர்தலில், டிக்கெட் கொடுக்க வேண்டும்; டிக்கெட் உறுதி செய்தால், கட்சியில் இணைகிறேன். குழப்பம்மைசூரு அரசியலில் சா.ரா.மகேஷ் தலையிடக்கூடாது. அவர் தன் எல்லையை மீறி நடந்து கொள்கிறார். தேவையின்றி மைசூரு ம.ஜ.த.,வில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார். அவர் தன் தொகுதியை தவிர, மாவட்ட அரசியலில் மூக்கை நுழைக்கக்கூடாது என, அவருக்கு உத்தரவிட வேண்டும். குமாரசாமியும் கூட, சா.ரா.மகேஷின் பேச்சையே நம்புகிறார். இதற்கு கடிவாளம் போட வேண்டும். குமாரசாமியும் எவ்வளவு தேவையோ, அவ்வளவு மட்டும் தலையிட வேண்டும்.இந்த மூன்று நிபந்தனைகளுக்கு சம்மதித்தால், ம.ஜ.த.,விலேயே இருப்பதாக, ஜி.டி.தேவகவுடா கூறியதாக, ம.ஜ.த., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X