சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் பலியான சோகம் விஷம் குடித்து தந்தை தற்கொலை

Added : செப் 12, 2021
Share
Advertisement
ஆம்பூர்:இரு குழந்தைகள் பலியான சோகத்தில், தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கள்ளூரை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 45 மனைவி மீனாட்சி, 40. தம்பதியின் நான்காம் வகுப்பு படிக்கும் மகன் ஐஸ்வந்த், இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஹரிபிரீத்தா. திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் அருகே கைலாசகிரி மலைக்கு லோகேஸ்வரன், மனைவி, குழந்தைகளோடு

ஆம்பூர்:இரு குழந்தைகள் பலியான சோகத்தில், தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த கள்ளூரை சேர்ந்தவர் லோகேஸ்வரன், 45 மனைவி மீனாட்சி, 40. தம்பதியின் நான்காம் வகுப்பு படிக்கும் மகன் ஐஸ்வந்த், இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் ஹரிபிரீத்தா.

திருப்பத்துார் மாவட்டம் ஆம்பூர் அருகே கைலாசகிரி மலைக்கு லோகேஸ்வரன், மனைவி, குழந்தைகளோடு சென்றார். அங்கு குழந்தைகள் குளத்தில் இறங்கி மீன் பிடித்துக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி இறந்தனர்.குழந்தைகள் இறந்த சோகத்தில், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து லோகேஸ்வரனும், மனைவி மீனாட்சியும் ஆம்பூர் ரயில்வே ஸ்டேஷனில் குளிர் பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளனர்.

மயங்கி விழுந்த அவர்களை மக்கள் மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு லோகேஸ்வரன் இறந்தார்.

தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த சின்னகோளாப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ், 35; விவசாயி. இவரது மனைவி சத்யா, 30. மகள் ஜெயஸ்ரீ, 7; தம்பதியிடையே நேற்று முன்தினம் மாலை தகராறு நடந்தது.அப்போது சத்யா, மகள் ஜெயஸ்ரீக்கு விஷம் கொடுத்து, தானும் குடித்தார்.இருவரையும் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சத்யா இரவில் உயிரிழந்த நிலையில், நேற்று காலை ஜெயஸ்ரீயும் உயிரிழந்தார்.திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X