சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனித நேய ஜனநாயக கட்சி நிர்வாகி கொலையில் 2 பேர் கைது

Added : செப் 12, 2021
Share
Advertisement
வாணியம்பாடி:மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலரை கொலை செய்த வழக்கில், இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த வசீம் அக்ரம், 40; மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலராக இருந்தார்.நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு தொழுகை நடத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள், அவரை கத்தி, அரிவாளால்

வாணியம்பாடி:மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலரை கொலை செய்த வழக்கில், இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த வசீம் அக்ரம், 40; மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலராக இருந்தார்.நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு தொழுகை நடத்தி விட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது காரில் வந்த மர்ம நபர்கள், அவரை கத்தி, அரிவாளால் வெட்டி கொலை செய்த பின், அவரது தலையை துண்டித்து எடுத்து சென்றனர்.

கொலை நடந்த போது அந்த பகுதியில் இருந்த, 'சிசிடிவி' கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகள் 'இண்டிகா' காரில் வந்துள்ளனர்.ஆறு பேர் கொலை செய்தது தெரிந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டி சத்திரம் அருகே உள்ள சோதனைச்சாவடியில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் நான்கு பேர் தப்பினர்.

சென்னை வண்டலுாரைச் சேர்ந்த ரவி, 23, தில்லி குமார், 25 ஆகியோர் பிடிபட்டனர். விசாரணையில், வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவருக்கும், வசீம் அக்ரத்திற்கும் முன் விரோதம் இருந்தது.கஞ்சா வியாபாரி சொன்னதால் கூலிப்படையினர் வசீம் அக்ரத்தை கொலை செய்ததும், 25 லட்சம் ரூபாய் வாங்கப்பட்டதும் தெரிந்தது.ரவி, தில்லி குமாரை போலீசார் கைது செய்து, கார் மற்றும் 10 அரிவாள்களை பறிமுதல் செய்தனர். தலைமறைவான நான்கு பேர் மற்றும் கஞ்சா வியாபாரியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X