பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரி மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை:கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி மாணவர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 330 மாணவர்களுக்கு நேற்று தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி தரப்பில் தொடர்ந்து ரேண்டமாக பள்ளி, கல்லுாரிகளில் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், 55 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை

கோவை:கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி மாணவர் ஒருவருக்கு, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 330 மாணவர்களுக்கு நேற்று தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி தரப்பில் தொடர்ந்து ரேண்டமாக பள்ளி, கல்லுாரிகளில் பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு தொழில்நுட்ப கல்லுாரியில், 55 மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில், ஒருவருக்கு தொற்று உறுதியானது. அம்மாணவர், கோவையில் சிகிச்சை பெற விரும்பாததால், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து, விடுதியில் இருந்த சக மாணவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என, 330 பேருக்கு நேற்று மாநகராட்சி தரப்பில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதற்கான முடிவு, நாளை தெரியும் எனவும், உடன் இருந்த மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், கல்லுாரி முதல்வர் தாமரை தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X