சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகைக்கடை உரிமையாளரிடம் ரூ.2.94 கோடி பறிமுதல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
மதுரை:நகைக்கடை உரிமையாளர் விக்னேஸ்வரனிடம் கணக்கில் வராத 2.94 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர். சோதனைமதுரை தமிழ்ச்சங்கம் ரோடு விக்னேஸ்வரன் 32. இவர் தெற்காவணி மூல வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். கரிமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 1:30 மணிக்கு கட்டுமான பணி நடக்கும் வீட்டின் முன்,

மதுரை:நகைக்கடை உரிமையாளர் விக்னேஸ்வரனிடம் கணக்கில் வராத 2.94 கோடி ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறையிடம் ஒப்படைத்தனர்.


சோதனை

மதுரை தமிழ்ச்சங்கம் ரோடு விக்னேஸ்வரன் 32. இவர் தெற்காவணி மூல வீதியில் நகைக்கடை வைத்துள்ளார். கரிமேடு போலீஸ் ஸ்டேஷன் அருகே வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 1:30 மணிக்கு கட்டுமான பணி நடக்கும் வீட்டின் முன், விக்னேஸ்வரன் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது ரோந்து வந்த போலீசார் விசாரிக்க, நகைக்கடை வைத்திருப்பதாகவும், தொழில் விஷயமாக பேசிக் கொண்டு இருப்பதாகவும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் வைத்திருந்த பையை சோதனையிட்ட போது 2.94 கோடி ரூபாய் இருந்தது. தொழில் முதலீட்டிற்கானது என தெரிவித்த விக்னேஸ்வரன், பணத்தை யாரிடம் வாங்கினார் என்ற விபரத்தை தெரிவிக்கவில்லை.


வருமான வரி

மூவரையும் ஸ்டேஷனிற்கு அழைத்துச் சென்றனர். வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப் பட்டது. அதிகாரிகள் விசாரணையில், வருமானவரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்து வந்தது உறுதியானது.அவரது கடை, வீட்டில் சோதனையிட்டனர். பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறிவிட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X