பொது செய்தி

தமிழ்நாடு

சதுர்த்திக்கு கணபதி கரையவில்லை...

Added : செப் 12, 2021
Share
Advertisement
விநாயகர் சதுர்த்திக்கு சிலை விற்பனை சிறப்பாக இல்லாததால், பொம்மை தயாரிப்பு கலைஞர்கள் நுாற்றுக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.கோவையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆண்டுதோறும், 3,000க்கும் அதிகமான விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து சென்று, குளங்களில் விசர்ஜனம் செய்யப்படுவது வழக்கம்.கொரோனாவை கட்டுப்படுத்த, பொது இடங்களில்
 சதுர்த்திக்கு கணபதி கரையவில்லை...

விநாயகர் சதுர்த்திக்கு சிலை விற்பனை சிறப்பாக இல்லாததால், பொம்மை தயாரிப்பு கலைஞர்கள் நுாற்றுக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர்.கோவையில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவில் ஆண்டுதோறும், 3,000க்கும் அதிகமான விநாயகர் சிலைகள், ஊர்வலமாக எடுத்து சென்று, குளங்களில் விசர்ஜனம் செய்யப்படுவது வழக்கம்.கொரோனாவை கட்டுப்படுத்த, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வழிபடுவது தவிர்க்கப்பட்டது. பொம்மை தயாரிக்கும் கலைஞர்களுக்கு, இது பெருத்த அடியாகவே அமைந்தது.பொம்மை தயாரிப்பு கலைஞர் யோகானந்தம் கூறியதாவது:கொரோனா பாதிப்புக்கு முன், 2 இன்ச் முதல், 13 அடி வரை, 6,000 சிலைகள் தயாரித்தோம்; வியாபாரமும் நன்றாக இருந்தது. கொரோனா முதல் அலை சமயத்தில், கட்டுப்பாடுகளால் விற்பனை பாதியாக குறைந்தது.இருப்பினும் வாழ்வாதாரத்தை கடந்தாண்டு தாக்குப்பிடித்தோம். ஆனால் அரசின் நடவடிக்கைக்கு பயந்து, இந்தாண்டு மக்கள் சிலைகள் வாங்குவதை தவிர்த்தனர்.இரவும், பகலும் கஷ்டப்பட்டு உருவாக்கிய, 3,000 சிலைகளில் பாதி சிலைகள் கூட விற்காமல் எங்களிடமே திரும்ப வந்து விட்டன. நவராத்திரியும், விநாயகர் சதுர்த்தியும்தான் எங்களுக்கு விற்பனை தரும் பண்டிகை. ஒரு பொம்மையை நம்பி 150க்கும் மேற்பட்டோர் உள்ளனர்.நாங்கள் உற்பத்தி செய்த விநாயகர் கரையாததால், மனரீதியாகவும், தொழில் ரீதியாகவும் பாதித்துள்ளோம். முன்பே தெரிந்திருந்தால் முதலீடு செய்திருக்க மாட்டோம். வாழ்வாதாரத்தையும் இழந்திருக்க மாட்டோம். அரசு நிவாரணம் தருவதை தவறு சொல்லவில்லை; ஆனால், அதை உணர்வு பூர்வமாக எங்களால் ஏற்க முடியவில்லை.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X