கோவை:தடையை மீறி பொது இடத்தில் விநாயகர் சிலை, ஊர்வலம் நடத்திய இந்து அமைப்பினர் மீது, போலீசார் வழக்கு பதிந்தனர்.கொரோனாவால், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கவும், நீர் நிலைகளில், கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது.தடை உத்தரவை மீறி, இந்து முன்னணியை சேர்ந்த ரகு, உமாபதி தலைமையில் சுந்தராபுரத்தில் இருந்து குறிச்சி குளத்துக்கு, விநாயகர் சிலை கரைப்புக்காக ஊர்வலமாக சென்றனர்.தடையை மீறியதாக, இந்து முன்னணியை சேர்ந்த, 10 பேர் மீது போத்தனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.இதேபோல், சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட காந்தி மாநகர் மைதானத்தில் இந்து முன்னணி சார்பில், ஐந்தரை அடி உயர சிலை வைக்கப்பட்டிருந்தது.இது தவிர, பாரத் சேனா சார்பில், காந்தி மாநகர் வணிக வளாகம் முன் மற்றும் இந்து முன்னணி சார்பில், கணபதி பஸ் ஸ்டாண்ட் முன் மூன்றரை அடி சிலை என, பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து, சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE