கோர்ட் செய்தி

தமிழ்நாடு

படைவீரர் வாரிசுகளுக்கு மருத்துவ படிப்பில் இடம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
மதுரை:படைவீரர்களை அங்கீ கரிக்கும் வகையில், அவர்களின் வாரிசுகளுக்கு தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க முன்னுரிமை பட்டியலை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.அரசாணைசிவகங்கை மாவட்டம் இளையான்குடி சொக்க படப்பு

மதுரை:படைவீரர்களை அங்கீ கரிக்கும் வகையில், அவர்களின் வாரிசுகளுக்கு தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க முன்னுரிமை பட்டியலை, மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


அரசாணை



சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சொக்க படப்பு குறளரசன், 'பணியில் உள்ள படை வீரர்களின் வாரிசுகளுக்கு, மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு மறுத்து தமிழக சுகாதாரத்துறை 2018 ஜூன் 1ல் அரசாணை வெளியிட்டது.'அதை ரத்து செய்து, பணியில் உள்ள படைப்பிரிவு வீரர்களின் வாரிசுகளுக்கும் ஒதுக்கீடு வழங்க உத்தரவிட வேண்டும்' என, மனு தாக்கல் செய்தார்.

கடந்த 2019ல் தனி நீதிபதி: மருத்துவம், தொழிற்கல்வி மற்றும் தொழிற்கல்வி சாராத படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், பணியில் உள்ள படைவீரர்களின் வாரிசுகளுக்கு இட ஒதுக்கீடு அல்லது முன்னுரிமை வழங்க, 2017 நவ., 30ல் மத்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

முன்னாள் படைவீரர், இறந்தவர், படையில் பணியில் உள்ளவர்களுக்கு இட ஒதுக்கீட்டை சுட்டி காட்டி, தமிழக அரசு 1979ல் அரசாணை வெளியிட்டது.இதை, 2018ல் வெளியானஅரசாணையில் தெரிவிக்கவில்லை. இந்த அரசாணை சட்ட விரோதம்; அதை ரத்து செய்கிறேன். பணியில் உள்ள படைவீரர்களின் வாரிசுகளை இட ஒதுக்கீட்டு பிரிவின் கீழ் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., சேர்க்கையில் அனுமதிக்க வேண்டும்.இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

நீதிபதிகள் என்.கிருபாகரன் - (தற்போது பணி ஓய்வு), பி.புகழேந்தி உத்தரவு:சுட்டெரிக்கும் வெயில் மற்றும் உறைபனி குளிரில் எல்லையை படைவீரர்கள் பாதுகாக்கின்றனர். அவர்கள் துாங்காமல் பாதுகாப்பில் ஈடுபடுவதால் தான், நாம் வீடுகளுக்குள் பாதுகாப்பாக துாங்குகிறோம். தன்னலமற்ற சேவைபடைவீரர்கள் தன்னலமற்ற சேவை செய்கின்றனர்.

பணியில் உள்ள படைவீரர்களின் வாரிசுகளை, மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு புறக்கணிப்பது அதிர்ச்சியளிக்கிறது.பணியில் உள்ள படைவீரர்களின் வாரிசுகளுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, பஞ்சாபில் மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. பணியில் உள்ள படைவீரர்களை அங்கீகரிக்கும் வகையில், அவர்களின் வாரிசுகளுக்கு தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல், மருத்துவப் படிப்பில் 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என இந்நீதிமன்றம் எதிர்பார்க்கிறது.

அனைவருக்கும் சம வாய்ப்பு அளித்து பலன் பெறும் வகையில் முன்னுரிமை பட்டியலை, மத்திய அரசு 12 வாரங்களில் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள காரணங்கள் ஏற்புடையதே. அதில் குறைபாடு இல்லை. மனுவை பைசல் செய்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X