கியூபில் உருவாகுறாங்க பாரதியும் கணபதியும்!

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை துடியலுார் கேம்போர்டு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார், 8 வயது மாணவி ஹன்சிதா. ஒன்றரை வயது முதலே, ரூபிக்ஸ் கியூப் விளைாடுவதற்கு பயிற்சி எடுத்துள்ளார்.இது தொடர்பாக, மாவட்ட, மாநில அளவில் ரூபிக்ஸ் பல்வேறு உருவ கியூப்களை குறிப்பிட்ட நேரத்தில் நேராக்கி, வெற்றிகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி வேறு என்ன செய்யலாம் என்று
 கியூபில் உருவாகுறாங்க பாரதியும் கணபதியும்!

கோவை துடியலுார் கேம்போர்டு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறார், 8 வயது மாணவி ஹன்சிதா. ஒன்றரை வயது முதலே, ரூபிக்ஸ் கியூப் விளைாடுவதற்கு பயிற்சி எடுத்துள்ளார்.இது தொடர்பாக, மாவட்ட, மாநில அளவில் ரூபிக்ஸ் பல்வேறு உருவ கியூப்களை குறிப்பிட்ட நேரத்தில் நேராக்கி, வெற்றிகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரூபிக்ஸ் கியூப்களை பயன்படுத்தி வேறு என்ன செய்யலாம் என்று சிந்தித்து இதில் உருவங்களை வரைந்து, பயிற்சி மேற்கொண்டுள்ளார். முதலில், 25 கியூப்களை மட்டும் வைத்து, நாய், பூனை, தமிழ், ஆங்கில எழுத்துக்களை ஒருங்கிணைத்து பயிற்சி பெற்றவர். தற்போது, உருவங்களை ஒருங்கிணைத்து அசத்தி வருகிறார். மாணவி ஹன்சிதா கூறுகையில், ''என் அம்மா சுபாஷினி, அப்பா குருமூர்த்தி இருவரும் கொடுத்த ஊக்கம் ஏதாவது செய்ய வேண்டும் என தோன்றியது. யூடியூப் போன்றவற்றில் ரூபிக்ஸ் கியூப்களை வைத்து உருவங்களை வரைந்ததை பார்த்து, ஆர்வம் ஏற்பட்டது.வீட்டில் இருந்த கியூப்களை பயன்படுத்தி, சிறிய எழுத்துக்களை ஒருங்கிணைத்தேன். அம்மா எனது ஆர்வத்தை புரிந்து, 300 கியூப்களை வாங்கி பரிசளித்தார்.தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் உருவத்தையும், மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு, பாரதியாரின் உருவத்தையும் ஒருங்கிணைத்தேன்.விநாயகர் உருவத்தை ஒருங்கிணைக்க, 3 மணி நேரமும், பாரதியார் உருவத்தை வரைய, 2 மணி நேரமும் தேவைப்பட்டது.வருங்காலங்களில் அதிக பயிற்சி பெற்று, குறைந்த நேரத்தில் விரைந்து பெரிய உருவங்களை வரைய திட்டமிட்டு பயிற்சி துவக்கியுள்ளேன்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X