பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய நிதியமைச்சருக்கு மதுரையில் வரவேற்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
மதுரை:துாத்துக்குடி, விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.விமான நிலையத்தில் அவரை கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், பா.ஜ., மாநில செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் சுசீந்திரன், சசிராமன், ஹரிஹரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின் அவர் அரசு சுற்றுலா

மதுரை:துாத்துக்குடி, விருதுநகர் மாவட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை வந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான நிலையத்தில் அவரை கலெக்டர் அனீஷ்சேகர், மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், பா.ஜ., மாநில செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் சுசீந்திரன், சசிராமன், ஹரிஹரன் உள்ளிட்டோர் வரவேற்றனர். பின் அவர் அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

அங்கு மாநில வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் பூமிநாதன், வெங்கடேசன் அவரை வரவேற்றனர்.இன்று (செப்.12) துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரியில் நடக்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி விழா, எட்டையாபுரத்தில் நடக்கும் மகாகவி பாரதியார் நுாற்றாண்டு நினைவு விழாவில் மத்திய நிதியமைச்சர் பங்கேற்கிறார்.

பின் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சவுடாம்பிகா பொறியியல் கல்லுாரியில் அனைத்து வங்கி அதிகாரிகளுடன் வங்கி திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இரவு மதுரை அரசு சுற்றுலா விருந்தினர் மாளிகையில் தங்கும் அவர் நாளை (செப்., 13) காலை சென்னை செல்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X