விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

Added : செப் 12, 2021
Share
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தில் தரிசு நிலங்களை விளைநிலமாக்குவது குறித்து அட்மா திட்ட விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.முகாமில் நீண்டநாள் சாகுபடி செய்யாத தரிசு நிலங்களை சீரமைத்து, மண் பரிசோதனை செய்து பசுந்தாள் பயிரிட்டு பயன்படுத்துவது குறித்து பயிற்சியளித்தனர். நுண்ணீர் பாசன திட்டம், இயற்கை வேளாண் சாகுபடி, பூச்சி நோய் மேலாண்மை

பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தில் தரிசு நிலங்களை விளைநிலமாக்குவது குறித்து அட்மா திட்ட விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

முகாமில் நீண்டநாள் சாகுபடி செய்யாத தரிசு நிலங்களை சீரமைத்து, மண் பரிசோதனை செய்து பசுந்தாள் பயிரிட்டு பயன்படுத்துவது குறித்து பயிற்சியளித்தனர். நுண்ணீர் பாசன திட்டம், இயற்கை வேளாண் சாகுபடி, பூச்சி நோய் மேலாண்மை குறித்து உதவி வேளாண் இயக்குனர் விஜயா விளக்கினார்.வேளாண் அலுவலர் சூரியலட்சுமி, உதவி வேளாண் அலுவலர் தங்கதுரை, அட்மா திட்ட அலுவலர்கள் சவுந்தர்ராஜன், இளையராஜா பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X