மூன்றாவது அணி முயற்சி; இணையும் தலைவர்கள்

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி-முன்னாள் துணை பிரதமர் மறைந்த தேவி லாலின் பிறந்த நாள் விழாவில், சமாஜ்வாதி தலைவர் முலாம் சிங் யாதவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.முன்னாள் துணை பிரதமரும், இந்திய தேசிய லோக் தள தலைவருமான மறைந்த தேவி லால் பிறந்த தினம், வருகிற 25ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக பிரமாண்ட விழாவுக்கு அவரது மகனும், ஹரியானா முன்னாள் முதல்வருமான ஓம்

புதுடில்லி-முன்னாள் துணை பிரதமர் மறைந்த தேவி லாலின் பிறந்த நாள் விழாவில், சமாஜ்வாதி தலைவர் முலாம் சிங் யாதவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.



latest tamil news


முன்னாள் துணை பிரதமரும், இந்திய தேசிய லோக் தள தலைவருமான மறைந்த தேவி லால் பிறந்த தினம், வருகிற 25ல் கொண்டாடப்படுகிறது. இதற்காக பிரமாண்ட விழாவுக்கு அவரது மகனும், ஹரியானா முன்னாள் முதல்வருமான ஓம் பிரகாஷ் சவுதாலா ஏற்பாடு செய்துள்ளார். இந்த விழாவில் பங்கேற்க, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், பீஹார் முதல்வர் நிதிஷ் குமார், முன்னாள் பிரதமர் தேவ கவுடா, சிரோமணி அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோர் விழாவில் பங்கேற்க உறுதி அளித்துள்ளனர்.தேசியவாத காங்., தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


latest tamil news


''பா.ஜ., காங்., ஆகிய கட்சிகளுக்கு மக்கள் மாற்று தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த விழாவில், மூன்றாவது அணி உருவாவதற்கான விதை துாவப்படுவதுடன், மக்கள் பிரச்னைகள் குறித்து குரல் கொடுக்கப்படும்,'' என, இந்திய தேசிய லோக் தள தலைவர் அபய் சவுதாலா தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
12-செப்-202121:23:23 IST Report Abuse
sundarsvpr போகாத ஊருக்கு பாதை போடுவதுபோல உள்ளது. விந்தியமலைக்கு கீழ் உள்ள மாநிலங்கள் பி ஜெ பி க்கு தடையாய் உள்ளன. மூன்றாவது அணிக்கு தலைமை தெற்கிலிருந்து ஒருவர் வரவேண்டும். தெற்குக்கு தேவையான அங்கீகாரம் இல்லையெனில் காவி கோடி ஊசி நுழையும் இடத்தில்கூட பட்டொளி வீசி பறக்கும்.
Rate this:
Cancel
vpurushothaman - Singapore,சிங்கப்பூர்
12-செப்-202114:00:18 IST Report Abuse
vpurushothaman விதை சரி. முளைக்கும் அளவுக்குத் தரமானதா ? என மக்கள் கேட்பார்களே ? ஒவ்வொருவருக்கும் பிரதமர் ஆக ஆசை. இந்த நெல்லிக்காய் மூட்டைகள் நாட்டை ஆளப்போவுதா ? சும்மா ஜீஜீபி.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
12-செப்-202112:43:20 IST Report Abuse
Suppan நந்தவனத்திலோர் ஆண்டி. ..அந்த ஆண்டிகள் கூடி மடம் கட்டப் போகிறார்களாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X