விழிப்புணர்வை பரப்பும் எஸ்.எம்.எஸ்., ஓவியங்கள்!| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விழிப்புணர்வை பரப்பும் 'எஸ்.எம்.எஸ்.,' ஓவியங்கள்!

Added : செப் 12, 2021
Share
ஓவியங்கள் வாயிலாக தம்பு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர் வர்ஷித், சமூக வலைதளங்களில் கோவிட் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிப்பவர் மாணவர் வர்ஷித். ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் உடைய வர்ஷித், அதன் வாயிலாக, கோவிட் விழிப்புணர்வை சமூக வலைதளம் மூலமாக, பொது மக்களிடையே ஏற்படுத்தி
 விழிப்புணர்வை பரப்பும் 'எஸ்.எம்.எஸ்.,' ஓவியங்கள்!

ஓவியங்கள் வாயிலாக தம்பு மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவர் வர்ஷித், சமூக வலைதளங்களில் கோவிட் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ்காலனி மேல்நிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிப்பவர் மாணவர் வர்ஷித். ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் உடைய வர்ஷித், அதன் வாயிலாக, கோவிட் விழிப்புணர்வை சமூக வலைதளம் மூலமாக, பொது மக்களிடையே ஏற்படுத்தி வருகிறார்.வர்ஷித் கூறுகையில், " ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் உள்ளது. வெறும் ஓவியங்கள் மட்டும் வரையாமல், அதில், சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறேன்.சமூக இடைவெளி, அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவிக் கொள்ளுதல், முக கவசம் அணிதல் அரசு அறிவுறுத்தி உள்ள அனைத்து கோவிட் தொற்று நடைமுறைகளை தவறாமல் பின்பற்றுதல் ஆகிய கருத்துகளை, உள்ளடக்கிய ஓவியங்களை வரைந்து சமூக வலைதளங்களில், வெளியிட்டு வருகிறேன். பள்ளி நிர்வாகமும், ஓவிய ஆசிரியர் உண்ணி கிருஷ்ணனும், சிறந்த ஊக்கம் அளித்து வருகின்றனர்," என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X