ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம்

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
சென்னை:என்.டி.டி. 'டேட்டா சென்டர் மற்றும் கிளவுட்' உள்கட்டமைப்புநிறுவனம் சார்பில் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படஉள்ள தகவல் தரவு மையத்திற்கு முதல்வர்ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை அம்பத்துாரில்5.89 ஏக்கர் பரப்புஅளவில் 8.25 லட்சம் சதுர அடியில் இம்மையம் அமைக்கப்பட உள்ளது. இந்நிறுவனம் ஜப்பான் நாட்டை தலைமையகமாகக் கொண்டு 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 160 தகவல்
 ரூ.2,500 கோடியில் தகவல் தரவு மையம்

சென்னை:என்.டி.டி. 'டேட்டா சென்டர் மற்றும் கிளவுட்' உள்கட்டமைப்புநிறுவனம் சார்பில் 2500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படஉள்ள தகவல் தரவு மையத்திற்கு முதல்வர்ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

சென்னை அம்பத்துாரில்5.89 ஏக்கர் பரப்புஅளவில் 8.25 லட்சம் சதுர அடியில் இம்மையம் அமைக்கப்பட உள்ளது. இந்நிறுவனம் ஜப்பான் நாட்டை தலைமையகமாகக் கொண்டு 20க்கும் மேற்பட்ட நாடுகளில் 160 தகவல் தரவு மையங்களை நிறுவி உள்ளது.

ந்நிறுவனம் அம்பத்துாரில் 2500 கோடி ரூபாய் முதலீடு செய்து 700 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் தகவல் தரவு மையம் மற்றும் 'கேபிள்' இறங்கு தளங்கள் அமைத்திடும். இத்திட்டத்தில் 50 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவும் திட்டமும் அடங்கும்.


புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 'டி.பி.வேர்ல்டு' குழுமம் துாத்துக்குடி திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதுார் சேலம் ஈரோடு கோவை நகரங்களில் 2 000 கோடி ரூபாய் முதலீட்டில் 'கன்டெய்னர்' முனையம் சிறு துறைமுகம் குளிர்பதனக் கிடங்கு பல்பொருள் கிடங்கு பூங்கா நவீன வர்த்தக கிடங்கு மண்டலம் தகவல் தரவு மையம் போன்றவற்றை நிறுவ திட்டமிட்டுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. இந்நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமை செயலர் இறையன்பு தொழில் துறை முதன்மை செயலர் முருகானந்தம் தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பூஜா குல்கர்னி பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X