கொரோனா இழப்பீடு பெற வழிகாட்டி நெறிமுறைகள்| Dinamalar

கொரோனா இழப்பீடு பெற வழிகாட்டி நெறிமுறைகள்

Added : செப் 12, 2021
Share
புதுடில்லி:'கொரேனாவால் இறந்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தயாரித்துள்ளன' என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.கொரோனாவால் இறந்தோருக்கு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கோரி வழக்கறிஞர்கள் கவுரவ்குமார்

புதுடில்லி:'கொரேனாவால் இறந்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தயாரித்துள்ளன' என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் இறந்தோருக்கு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் 12வது பிரிவின் கீழ் 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க கோரி வழக்கறிஞர்கள் கவுரவ்குமார் பன்சால் ரீபக் கன்சால் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் 'கொரோனாவால் உயிர் இழந்தோருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை ஆறு வாரங்களில் வகுக்க வேண்டும்; இழப்பீடு தொகையை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முடிவு செய்ய வேண்டும்' என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் கூறியிருப்பதாவது:கொரோனாவால் இறந்தோரின் குடும்பத்தினர் இழப்பீடு பெறுவதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய சுகாதார அமைச்சகமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் உருவாக்கியுள்ளன.அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தோருக்கு வைரஸ் பாதிப்பு 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

வைரஸ் பாதிப்புக்குஉள்ளாகிருந்தாலும் தற்கொலை விபத்து உள்ளிட்ட வேறு காரணங்களாகல் இறந்திருந்தால் அவர்கள் கொரோனா பாதிப்பால் இறந்ததாக கருதப்பட மாட்டார்கள்.மேலும் இறந்தவரின்இறப்பு சான்றிதழில் கொரோனா தொற்றால் இறந்துள்ளார் என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X