வாலிபரை தாக்கிய மூவருக்கு வலை
கிள்ளை: கிள்ளை சிங்காரக்குப்பம் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் செந்தமிழ்ச்செல்வன், 27; இவர் நேற்று முன்தினம் சிங்காரக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் வந்து மொபைல்போனில் எனக்கு ஏன் மெசேஜ் அனுப்பினாய் என கேட்டார். நான் மெசேஜ் அனுப்பவில்லை என்றதால் தகராறு ஏற்பட்டு, சக்திவேல் மற்றும் 3 பேர் சேர்ந்து, செந்தமிழ்செல்வனை, கட்டையால் தாக்கினர். தடுக்க வந்த செந்தமிழ்ச்செல்வனின், பாட்டி சுப்பம்மாள், சகோதரர் கவியரசன் ஆகியோரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். படுகாயமடைந்த மூவரும் சிதம்பரம் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டனர். கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப் பதிந்து சக்திவேல், முனியாண்டி, ராமலிங்கம் ஆகியோரை தேடிவருகிறார்.
பெண்ணை தாக்கியவர் மீது வழக்கு
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடியைச் சேர்ந்தவர் காசிநாதன் மனைவி ரேவதி, 35; இவருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த பஞ்சமூர்த்தி என்பவருக்கும் இடம் சம்பந்தமாக முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டு பஞ்சமூர்த்தி, ரேவதியை திட்டி தாக்கினார். இது குறித்த புகாரின் பேரில், பஞ்சமூர்த்தி மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.டீக்கடைக்காரரை தாக்கியவர் மீது வழக்கு
விருத்தாசலம்: விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டி அருகே பரசுராமன், 33, என்பவரின் டீ கடையில் செல்வராஜ் நகர் சுரேஷ், 46; டீ குடித்துள்ளார். டீ குடித்த பணத்தை பரசுராமன் கேட்ட போது, அவரை சுரேஷ் தாக்கினார். இதுகுறித்த புகாரின் பேரில் சுரேஷ் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
கிராவல் கடத்தியவர்கள் கைது
விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று சின்னபண்டாரங்குப்பம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். டிராக்டரில் செம்மண் கிராவல் கடத்திய அதே பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், 53; சரண்ராஜ், 23; ஆகியோரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.
மூதாட்டி மீது தாக்கு
விருத்தாசலம்: கம்மாபுரம் அடுத்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகப்பன் மனைவி ராஜேஸ்வரி, 60; அருண்குமார். இருவருக்கும் முன் விரோதம் இருந்தது. நேற்று முன் தினம் ராஜேஸ்வரி தனது வீட்டு வாசலில் நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த அருண்குமார், ராஜேஸ்வரியை திட்டி, தாக்கினார். புகாரின் பேரில் அருண்குமார் மீது கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
சிறுமி கடத்தல்: வாலிபருக்கு வலை
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 24, இவர் மங்கலம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியை நேற்றுமுன்தினம் கடத்திச் சென்றார். புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, பெரியசாமியை தேடி வருகின்றனர்.
ஜூஸ் கடைக்காரர் மீது தாக்கு
விருத்தாசலம்: விருத்தாசலம் சித்தலுார் புறவழிச்சாலையில் ஜூஸ் கடை நடத்தி வருபவர் அழகுராஜன், 31; நேற்று முன்தினம் சித்தலுார் பகுதியைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 25; ராஜசேகர், 24; பழனிசாமி, 21; ஆகியோர் அழகுராஜ் கடையில் போண்டா வங்கினர். அதற்கான பணத்தை அழகுராஜன் கேட்டபோது, மூவரும், அவரை ஆபாச திட்டி, மதுபாட்டிலால் தலையில் தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, ராஜசேகர், பழனிசாமியை கைது செய்தனர். ஹரிகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE