சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை கத்தியால் குத்தி செயின் பறிக்க முயற்சி

Added : செப் 12, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே துாங்கிய பெண்ணிடம் செயின் பறிக்க முயன்று கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி சரோஜா, 50; தனிமையில் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் எதிரே துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் மர்ம நபர் சரோஜா அணிந்திருந்த

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே துாங்கிய பெண்ணிடம் செயின் பறிக்க முயன்று கத்தியால் குத்தி விட்டு தப்பியோடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மனைவி சரோஜா, 50; தனிமையில் வசித்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் எதிரே துாங்கிக் கொண்டிருந்தார்.நள்ளிரவில் மர்ம நபர் சரோஜா அணிந்திருந்த செயினை அறுக்க முயன்றார். உடன் எழுந்த சரோஜா கூச்சலிட்டார். ஆத்திரமடைந்த மர்ம நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடினார்.காயமடைந்த சரோஜா, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X