திரிபுராவில் செப்., 15ல் திரிணமுல் காங்., பேரணி

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கவுஹாத்தி-திரிபுராவில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக, 15ம் தேதி திரிணமுல் காங்., பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் பேரணி நடக்க உள்ளது.வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., - பா.ஜ., கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., தொண்டர்கள்

கவுஹாத்தி-திரிபுராவில் ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராக, 15ம் தேதி திரிணமுல் காங்., பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் பேரணி நடக்க உள்ளது.



latest tamil news


வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் முதல்வர் பிப்லப் குமார் தேவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ., - பா.ஜ., கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, அகர்தலாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., தொண்டர்கள் தாக்கப்பட்டனர். அக்கட்சியின் இரு அலுவலகங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு பா.ஜ., தான் காரணம் என, மார்க்சிஸ்ட் கம்யூ., குற்றஞ்சாட்டியுள்ளது. இதை மறுத்துள்ள பா.ஜ., தன்பூரில், தங்கள் கட்சித் தொண்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து நடந்த பேரணியில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் கல் வீசி தாக்கியதாக கூறியுள்ளது.


latest tamil news


இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூ., தொண்டர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், ஆளும் பா.ஜ., அரசுக்கு எதிராகவும், திரிணமுல் காங்., திரிபுராவின் அகர்தலா நகரில் 15ம் தேதி கண்டன பேரணி நடத்த உள்ளது. திரிணமுல் காங்., பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் இப்பேரணி நடக்க உள்ளது.

இதற்கிடையே, 'திரிபுராவின் தற்போதைய சூழலை திரிணமுல் காங்., அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தக் கூடாது' என, மார்க்சிஸ்ட் கம்யூ., தெரிவித்துள்ளது. திரிபுராவில் 2023ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதில் வாக்காளர்களை கவர, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆளும் பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டத்தை இப்போதே துவக்கி விட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
12-செப்-202110:48:00 IST Report Abuse
sankaseshan இந்த அபிஷேக் பானர்ஜி நிலக்கரி ஊழலில் மாட்டி இருப்பவன் மம்தா பேகத்தின் மருமகன் இவனுங்க போராடுகிறானாம் வெட்கமில்லாமல்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
12-செப்-202109:42:03 IST Report Abuse
duruvasar உண்டியலில் காசு போடரதா இருந்தால் எங்கவேண்டுமானாலும் குத்துடான்ஸ் கட்சியாக கம்யூனிஸ்ட் கட்சி தன்னுடைய சரியான இடத்தில் செட்டிலாகி விட்டது நன்றாக தெரிகிறது. இனிமேல் குத்துநடன நிகழ்சி இடையே கனகராஜ் காமெடியையும் வைக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X