பொது செய்தி

தமிழ்நாடு

இறந்த தொழிலாளி குடும்பத்திற்குரூ.7.25 லட்சம் இழப்பீடு வழங்க தீர்வு

Added : செப் 12, 2021
Share
Advertisement
கடலுார் : பைக் மோதி தொழிலாளி இறந்த வழக்கில் ரூ. 7 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.உளுந்துார்பேட்டை தாலுகா, குறவர் காலனியைச் சேர்ந்தவர் பாசிமணி வியாபாரி சவுரியன், 65; இவர், கடந்தாண்டு அக்.,15ம் தேதி உளுந்துார்பேட்டை மேம்பாலம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த பைக் மோதி இறந்தார்.இழப்பீடு கோரி குடும்பத்தினர் கடலுார் மாவட்ட கோர்ட்டில் வழக்குத்

கடலுார் : பைக் மோதி தொழிலாளி இறந்த வழக்கில் ரூ. 7 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

உளுந்துார்பேட்டை தாலுகா, குறவர் காலனியைச் சேர்ந்தவர் பாசிமணி வியாபாரி சவுரியன், 65; இவர், கடந்தாண்டு அக்.,15ம் தேதி உளுந்துார்பேட்டை மேம்பாலம் அருகில் நடந்து சென்ற போது, பின்னால் வந்த பைக் மோதி இறந்தார்.இழப்பீடு கோரி குடும்பத்தினர் கடலுார் மாவட்ட கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.இவ்வழக்கு கடலுார் கோர்ட்டில் முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் தலைமையில் நேற்று நடந்த மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி புவனேஸ்வரி, கூடுதல் மாவட்ட அமர்வுநீதிபதி செந்தில்குமார், தொழிலாளர் நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி சுபா அன்புமணி, மகிளா நீதிமன்ற நீதிபதிபாலகிருஷ்ணன், 'போக்சோ' நீதிமன்ற நீதிபதி எழிலரசி, எஸ்.சி.,எஸ்.டி., நீதிமன்ற மாவட்ட நீதிபதி உத்தமராஜ், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பிரபாகர், சிறப்பு சார்பு நீதிபதி இருதயராணி முன்னிலை வகித்தனர். மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் வரவேற்றார். வக்கீல் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் சம்பத்குமார், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் சிவராஜ், மூத்த வக்கீல் அருளப்பன், வக்கீல் சித்ரா உட்பட பலர் பங்கேற்றனர்.இறந்த சவுரியன் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சத்து 25 ஆயிரம் இழப்பீடு வழங்க தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் சிவமணி, வக்கீல்கள் சரவணன், முகுந்தன், சத்யா முகுந்தன் ஆஜராகினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X