சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏரியில் மூழ்கிய 4 சிறுவர்கள் மீட்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மீன்பிடிக்கச் சென்று, நீரில் மூழ்கிய 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.அரகண்டநல்லுார் அடுத்த கோட்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் குணா, 6; சுபாஷ் மகன் முனீஷ், 5; அமாவாசை மகன்கள் திலீப், 5; பிரசாந்த் 6; நால்வரும், நேற்று மதியம் 12:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.ஆழமான பகுதிக்குச் சென்றதால்,

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் அருகே மீன்பிடிக்கச் சென்று, நீரில் மூழ்கிய 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்.

அரகண்டநல்லுார் அடுத்த கோட்டமருதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி மகன் குணா, 6; சுபாஷ் மகன் முனீஷ், 5; அமாவாசை மகன்கள் திலீப், 5; பிரசாந்த் 6; நால்வரும், நேற்று மதியம் 12:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.ஆழமான பகுதிக்குச் சென்றதால், நால்வரும் நீரில் மூழ்கி உயிருக்கு போராடினர். அப்போது அந்த வழியாகச் சென்ற சிலர் சிறுவர்களைக் காப்பாற்றி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.தற்போது நால்வரும் அபாய கட்டத்தைத் தாண்டி சிகிச்சை பெற்று வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.சிறுவர்கள் மீட்கப்பட்டாலும், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மேலும், சிறுவர்கள் மூழ்கி இருக்கிறார்களா என தேடிப் பார்த்தனர். அவ்வாறு யாரும் இல்லை என்பது தெரிந்ததும், நிம்மதி அடைந்தனர்.அரகண்டநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X