சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கண்டக்டர்கள் மோதல்: போலீஸ் வழக்குப் பதிவு

Added : செப் 12, 2021
Share
Advertisement
திண்டிவனம் : திண்டிவனத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் கண்டக்டர்கள் தாக்கிக் கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற பஸ் நேற்று காலை திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் வந்து நின்றது. அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற தனியார் பஸ்சும் நின்றது. 2 பஸ்

திண்டிவனம் : திண்டிவனத்தில் அரசு மற்றும் தனியார் பஸ் கண்டக்டர்கள் தாக்கிக் கொண்டது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற பஸ் நேற்று காலை திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் வந்து நின்றது. அப்போது, காஞ்சிபுரத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்ற தனியார் பஸ்சும் நின்றது. 2 பஸ் கண்டக்டர்களுக்கிடையேயும் பயணிகளை ஏற்றுவதில் தகராறு ஏற்பட்டது.இதில், அரசு பஸ் கண்டக்டர் பென்னாகரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி, 47; தனியார் பஸ் கண்டக்டர் காஞ்சிபுரம், அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன், 31; ஆகிய இருவரும் தாக்கிக்கொண்டனர்.

பஸ்களை சாலையின் நடுவே நிறுத்தியதால் போக்குவரத்து பாதித்து.தகவலறிந்த திண்டிவனம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.இச்சம்பவம் குறித்து, அரசு பஸ் கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி, தன்னை தனியார் பஸ் கண்டக்டர் மணிகண்டன், தாக்கியதாகவும், அப்போது 2 சவரன் செயின் காணாமல் போனதாகவும் திண்டிவனம் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தனியார் பஸ் கண்டக்டர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X