பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாரதியார் நினைவு தினம் அனுசரிப்பு

Added : செப் 12, 2021
Share
கடலுார் : கடலுாரில் பல்வேறு இடங்களில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.கடலுாரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கட்சி மாநில செயலாளர் வைத்தீஸ்வரன், புதுச்சேரி மாநிலம் அரிகிருஷ்ணன், தென் கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, வடகிழக்கு நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் சண்முகம், நகர செயலாளர் ரவி ராஜ் உள்ளிட்டோர்

கடலுார் : கடலுாரில் பல்வேறு இடங்களில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கடலுாரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கட்சி மாநில செயலாளர் வைத்தீஸ்வரன், புதுச்சேரி மாநிலம் அரிகிருஷ்ணன், தென் கிழக்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி, வடகிழக்கு நற்பணி அணி மாவட்ட அமைப்பாளர் சண்முகம், நகர செயலாளர் ரவி ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மா.கம்யூ.,:பாரதியார் நினைவு நாளையொட்டி கடலுார் லாரன்ஸ் ரோட்டில், மா.கம்யூ., சார்பில் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது. நகர செயலாளர் அமர்நாத் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மருதவாணன், நகரகுழு உறுப்பினர்கள் ஆனந்து, பக்கிரான், கருணாகரன், சேட்டு தமிழ்மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X