பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் இன்று 'மெகா' தடுப்பூசி முகாம்

Added : செப் 12, 2021
Share
Advertisement
கோவை;''கொரோனா 'மெகா' தடுப்பூசி முகாமில், 1.5 லட்சம் ஊசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என, கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறினார்.கோவை மாவட்டத்தில் இன்று 'மெகா' கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதையொட்டி, கொரோனா தடுப்பு பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், முகாம் நடக்கும் வ.உ.சி.,

கோவை;''கொரோனா 'மெகா' தடுப்பூசி முகாமில், 1.5 லட்சம் ஊசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்,'' என, கோவை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறினார்.கோவை மாவட்டத்தில் இன்று 'மெகா' கொரோனா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இதையொட்டி, கொரோனா தடுப்பு பணி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர், முகாம் நடக்கும் வ.உ.சி., மைதானம் உள்ளிட்ட இடங்களில் நேற்று ஆய்வு செய்தார். கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் என அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.நிருபர்களிடம் சங்கர் கூறியதாவது:கோவை, நீலகிரி மாவட்டங்கள் கேரளாவுக்கு அருகே இருப்பதால் கொரோனா தடுப்பு விஷயத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. முகாமில், 1.5 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில், 1,016, நகராட்சியில், 151, மாநகராட்சியில், 308 என, மாவட்டத்தில், 1,475 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன.மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு தனி கவுன்டர்கள் அமைக்கப்படுகின்றன. காலை, 7:00 முதல் இரவு, 7:00 மணி வரை நடக்கும் முகாம்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மக்கள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X