பொது செய்தி

தமிழ்நாடு

சின்ன வெங்காயம் கொள்முதல் விவசாயிகள் வலியுறுத்தல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
பல்லடம்;'சின்ன வெங்காயத்தை, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்' என்று, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.சின்ன வெங்காயம் கொள்முதல் விலை கிலோ 20 ரூபாயை விடக் குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 'அரசே கொள்முதல் செய்ய வேண்டும்' என்று விவசாய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து:உள்ளூரில் அதிக உற்பத்தி, அண்டை

பல்லடம்;'சின்ன வெங்காயத்தை, அரசே கொள்முதல் செய்ய வேண்டும்' என்று, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.சின்ன வெங்காயம் கொள்முதல் விலை கிலோ 20 ரூபாயை விடக் குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 'அரசே கொள்முதல் செய்ய வேண்டும்' என்று விவசாய அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து:உள்ளூரில் அதிக உற்பத்தி, அண்டை மாநில வரத்து அதிகரிப்பு உள்ளிட்டவற்றால் காய்கறிகளின் விலை சரிவடைகிறது. திருமணம், கோவில் விழா, பண்டிகை, ஓட்டல்கள் உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, சின்ன வெங்காயத்தின் பயன்பாடு குறைந்துள்ளதால், விலை கடுமையாக சரிந்துள்ளது.விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, அரசே கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன்: வெங்காயம் விலை வீழ்ச்சி காரணமாக, விவசாயிகள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அவற்றைக் கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X