பொது செய்தி

தமிழ்நாடு

கிரைம் செய்திகள்...

Added : செப் 12, 2021
Share
Advertisement
போக்குவரத்துக்கு இடையூறு: ஒருவர் கைதுவிழுப்புரம்: மேற்கு சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் நேற்று திருச்சி நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அங்கு, போக்குவரத்துக்கு இடையூறாக டீ கடை வைத்திருந்த சோழகனுாரைச் சேர்ந்த சுரேந்திரன், 41; என்பவரை கைது செய்தனர்.முதியவர் மயங்கி விழுந்து சாவுஉளுந்துார்பேட்டை: செம்மனந்தல் ஊராட்சிக்குட்பட்ட எஸ். குச்சிப்பாளையம்

போக்குவரத்துக்கு இடையூறு:

ஒருவர் கைதுவிழுப்புரம்: மேற்கு சப் இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான போலீசார் நேற்று திருச்சி நெடுஞ்சாலையில் ரோந்து சென்றனர். அங்கு, போக்குவரத்துக்கு இடையூறாக டீ கடை வைத்திருந்த சோழகனுாரைச் சேர்ந்த சுரேந்திரன், 41; என்பவரை கைது செய்தனர்.

முதியவர் மயங்கி விழுந்து சாவு

உளுந்துார்பேட்டை: செம்மனந்தல் ஊராட்சிக்குட்பட்ட எஸ். குச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி, 68; இவர், நேற்று காலை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏரி வாய்க்கால் மராமத்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடன் திருநாவலுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். திருநாவலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தகராறு: இருவர் கைது

ரிஷிவந்தியம்: காட்டுசெல்லுாரைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் சிவா, 28; மேமாளூரைச் சேர்ந்தவர் அந்தோணி மகன் ராயப்பன் இருவருக்குமிடையே பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்து வந்தது. சிவா வாங்கிய பணத்தை தந்தை தங்கமணியும், தம்பி வெங்கடேசனும் தருவதாக பொறுப்பேற்றனர்.கடந்த 10ம் தேதி இரவு 9 மணியளவில், ராயப்பன் பணத்தைக் கேட்க வெங்கடேசன் வீட்டிற்குச் சென்றார். அப்போது ஏற்பட்ட தகராறில், ராயப்பன் தரப்பைச் சேர்ந்த 6 பேர் வெங்கடேசனையும், அவரது தந்தை தங்கமணியையும் தாக்கினர்.புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார், ராயப்பன், 36; ஜோசப் மகன் ஜான்; அந்தோணி மகன் மகிமை, சின்னப்பன் மகன் சின்னமணி, 28; உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிந்து, ராயப்பன், சின்னமணி ஆகியோரை கைது செய்தனர்.

இந்து முன்னணியினர் மீது வழக்கு

விழுப்புரம்: விநாயகர் சதுர்த்தியை யொட்டி, விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே இந்து முன்னணி மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவா தலைமையில் 15 பேர் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, டவுன் வி.ஏ.ஓ., செந்தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் மேற்கு போலீசார் சிவா உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிந்தனர்.இதேபோன்று விழுப்புரத்தில் அரசு விதிமுறைகள் மீறி விநாயகர் சிலை வைத்ததாக பா.ஜ., பொருளாளர் சுகுமார் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

மின்கம்பியில் சிக்கி மாடு பலி

வானுார்: கிளியனுார் அடுத்த நெசல் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ், 58; எருமை மாடு வளர்த்து வருகிறார். இவரது மாடுகள் நேற்று அதே கிராமத்தில் உள்ள நிலத்தில் மேய்ந்தன. அப்போது, உயர்மின்னழுத்த மின்கம்பி அறுந்து கீழே விழுந்தது. இதில், தேவராஜியின் எருமை மாடு சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X