பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய மக்கள் நீதிமன்றம் ரூ.2.82 கோடிக்கு தீர்வு

Added : செப் 12, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், ரூ. 2 கோடியே 82 லட்சம் மதிப்பில் தீர்வு காணப்பட்டது.விருத்தாசலம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பிரபா சந்திரன் தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூரியா முன்னிலை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி

விருத்தாசலம் : விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், ரூ. 2 கோடியே 82 லட்சம் மதிப்பில் தீர்வு காணப்பட்டது.

விருத்தாசலம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி பிரபா சந்திரன் தலைமை தாங்கினார். முதன்மை சார்பு நீதிபதி ஜெயசூரியா முன்னிலை வகித்தார். கூடுதல் சார்பு நீதிபதி மகாலட்சுமி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி மனோகரன், கூடுததல் நீதிபதி மணிமேகலை, மாஜிஸ்திரேட்டுகள் ஆனந்த், வெங்கடேஷ்குமார் ஆகியோர் வழக்குகளை விசாரித்தனர்.அதில், வாரா கடன், குடும்ப நலன், செக் மோசடி, விபத்து இழப்பீடு உட்பட 541 வழக்குகள் விசாரித்து ரூ. 2 கோடியே 82 லட்சத்து 43 ஆயிரத்து 940 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. இளநிலை நிர்வாக உதவியாளர் ஆனந்தஜோதி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X