சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமரசம் செய்த பெண் கொலை: பண்ருட்டி அருகே இருவர்  கைது

Added : செப் 12, 2021
Share
Advertisement
பண்ருட்டி:தகராறை விலக்கி விட்ட பெண்ணை தாக்கி, கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கருக்கையைச் சேர்ந்தவர் சாரங்கபாணி, 45; டிரைவர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், 'டாடா ஏஸ்' வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, எதிரில் வசிக்கும் சதீஷ், 26, என்பவரின் வீட்டுக் கதவை தட்டி, யாரோ வீட்டினுள் செல்வதாக

பண்ருட்டி:தகராறை விலக்கி விட்ட பெண்ணை தாக்கி, கொலை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர்.கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த கருக்கையைச் சேர்ந்தவர் சாரங்கபாணி, 45; டிரைவர். இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில், 'டாடா ஏஸ்' வாகனத்தை நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது, எதிரில் வசிக்கும் சதீஷ், 26, என்பவரின் வீட்டுக் கதவை தட்டி, யாரோ வீட்டினுள் செல்வதாக கூறினார்.ஆனால் யாரும் இல்லாததால், சதீஷ், அவரது சித்தப்பா தனவேல், 55; ஆகியோர், 'எங்கள் வீட்டிற்கு யார் வந்தால் உனக்கு என்ன' என்று கேட்டு சாரங்கபாணியை திட்டி தாக்கினர். சத்தம் கேட்டு சாரங்கபாணியின் அண்ணன் கிருஷ்ணமூர்த்தியின் மனைவி ராசாத்தி, 55, வந்தார்.சாரங்கபாணிக்கு ஆதரவாக தகராறை தட்டிக் கேட்டு விலக்கி விட முயன்றார். அவரையும் தனவேல், சதீஷ் ஆகியோர் தாக்கியதில் கீழே விழுந்து இறந்தார்.டி.எஸ்.பி., சபியுல்லா, காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். ராசாத்தி மகள் சங்கீதா, 30, புகாரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, தனவேல், 50; சதீஷ், 26; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X