பொது செய்தி

தமிழ்நாடு

20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
கடலுார் : டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.இது குறித்து சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:சட்டசபை கூட்டத்தொடரில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள், சம்பள உயர்வு எதிர்பார்த்தோம். ஆனால், கடந்த ஆட்சியைப் போன்றே ரூ.500 மட்டும் ஊதிய உயர்வு

கடலுார் : டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும் என, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம், அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் சிறப்புத் தலைவர் பாலசுப்ரமணியன் கூறியதாவது:சட்டசபை கூட்டத்தொடரில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள், சம்பள உயர்வு எதிர்பார்த்தோம். ஆனால், கடந்த ஆட்சியைப் போன்றே ரூ.500 மட்டும் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதனால், 25 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் ஏமாற்றமடைந்தனர். கொரோனா காலத்தில் உயிரை பற்றி கவலைபடாமல் வேலை பார்த்து அரசுக்கு வருமானம் ஈட்டித்தந்தனர். கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பூதியத்திலேயே பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணிநிரந்தரம் கோரி பல போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்களுக்கு கடந்த தீபாவளி போனஸ் 10 சதவீதம் மட்டுமே வழங்கப்பட்டது. அதை 20 சதவீதமாக இந்த ஆண்டு தீபாவளி போன்ஸ் உயர்த்தி வழங்க வேண்டும்.சட்டசபை கூட்டம் நிறைவு பெறும் 13 ம் தேதியாவது, டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்றி அறிவிப்பினை தமிழக முதல்வர் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.அருகில் சங்க மாநில தலைவர் சரவணன், மாவட்ட தலைவர் அல்லிமுத்து உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X