நில அளவை வரைபடம் கிடைப்பதில் சிக்கல்

Added : செப் 12, 2021
Share
Advertisement
சென்னை:வருவாய் துறையின், 'இ - சேவை' இணையதளத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்கு பிறகும், நில அளவை வரைபடங்களை பெற முடியாத நிலை தொடர்வதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.தமிழகத்தில், பட்டா விபரங்கள், விண்ணப்பங்கள், 'அ' பதிவேடு விபரங்களை, பொது மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்க, இ - சேவை இணையதளம் துவக்கப்பட்டது.இதில், பட்டா விபரங்களை பொதுமக்கள் அறிந்து

சென்னை:வருவாய் துறையின், 'இ - சேவை' இணையதளத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்கு பிறகும், நில அளவை வரைபடங்களை பெற முடியாத நிலை தொடர்வதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.தமிழகத்தில், பட்டா விபரங்கள், விண்ணப்பங்கள், 'அ' பதிவேடு விபரங்களை, பொது மக்கள் வீட்டில் இருந்தபடியே பார்க்க, இ - சேவை இணையதளம் துவக்கப்பட்டது.இதில், பட்டா விபரங்களை பொதுமக்கள் அறிந்து கொள்கின்றனர்.பட்டா மாறுதல் தொடர்பான விபரங்கள், விண்ணப்ப நிலை உள்ளிட்ட தகவல்களை, மக்கள் இதில் எளிதாக அறியலாம். இந்த வசதிக்கு, பொது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், இதில் நில அளவை வரைபடங்களை பார்க்க முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்; இதுகுறித்து, வருவாய் துறைக்கு புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, வருவாய் துறையின் இ - சேவை இணையதளத்தில், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின் நில அளவை வரைபடங்கள் கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தனர்.ஆனால், தொழில்நுட்ப மேம்பாட்டு பணிகளுக்கு பிறகும், பழைய நிலையே தொடர்வதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எளிய முறையில் நில அளவை வரைபடம் கிடைக்க, வருவாய் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X