பொது செய்தி

தமிழ்நாடு

1 லட்சம் பேர் தடுப்பூசி போட வருவார்கள் கண்காணிப்பு அதிகாரி எதிர்பார்ப்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாமில், 1 லட்சம் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என, எதிர்பார்ப்பதாக, கண்காணிப்பு அதிகாரி சந்தீப் நந்துாரி தெரிவித்தார்.கடலுார் மாவட்டத்தில் இன்று (12ம் தேதி) 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை கண்காணிக்க கடலுார் மாவட்டத்திற்கு சுற்றுலா துறை இயக்குனர் சந்தீப்நந்தூரி

கடலுார் : கடலுார் மாவட்டத்தில் நடத்தப்படும் சிறப்பு தடுப்பூசி முகாமில், 1 லட்சம் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என, எதிர்பார்ப்பதாக, கண்காணிப்பு அதிகாரி சந்தீப் நந்துாரி தெரிவித்தார்.

கடலுார் மாவட்டத்தில் இன்று (12ம் தேதி) 909 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது. இந்த முகாமை கண்காணிக்க கடலுார் மாவட்டத்திற்கு சுற்றுலா துறை இயக்குனர் சந்தீப்நந்தூரி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று, மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று (12ம் தேதி) காலை 7:00 மணி முதல் மாலை 7:00 வரையில் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சி பகுதிகளில் நடக்கிறது.பொதுமக்கள் அறியும் வகையில் தண்டோரா, ஒலிபெருக்கி மூலமாகவும், வீடுவீடாக துண்டு பிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மையத்திலும் தலா 100 பேர் வீதம், ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வருவார்கள் என எதிர்பார்க்கிறோம் என்றார்.கலெக்டர் பாலசுப்ரமணியம் கூறுகையில், மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்ட 21 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள தகுதியானவர்கள். இது வரை, 9.50 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது, 47 சதவீதமாகும். மாவட்டத்தில் 13 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.இன்று நடக்கும் முகாமில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 90 ஆயிரம் தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. இப்பணியில் 6,000 ஊழியர்கள் ஈடுபடுகின்றனர் என, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X