சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏலச்சீட்டு தகராறு 4 பேர் மீது வழக்கு

Added : செப் 12, 2021
Share
Advertisement
விழுப்புரம் : விழுப்புரத்தில் ஏலச்சீட்டு தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் ராஜா மனைவி ரோஜா. இவர், ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவதாசன் மனைவி சரஸ்வதி, 29; ஒரு லட்சம் ரூபாய் சீட்டு கட்டினார்.மூன்று தவணை கட்டிய நிலையில் மேலும் பணம் கட்ட முடியாததால், பணத்தை திரும்பத்

விழுப்புரம் : விழுப்புரத்தில் ஏலச்சீட்டு தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

விழுப்புரம், வழுதரெட்டியைச் சேர்ந்தவர் ராஜா மனைவி ரோஜா. இவர், ஏலச்சீட்டு நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த சிவதாசன் மனைவி சரஸ்வதி, 29; ஒரு லட்சம் ரூபாய் சீட்டு கட்டினார்.மூன்று தவணை கட்டிய நிலையில் மேலும் பணம் கட்ட முடியாததால், பணத்தை திரும்பத் தரும்படி சரஸ்வதி கேட்டுள்ளார். 6 மாதங்களாகியும் தரவில்லை. கடந்த 8ம் தேதி தனது உறவினர் பார்த்திபனுடன் சென்று, பணத்தை கேட்டபோது, ரோஜாவும், அவரது கணவர் ராஜாவும் சரஸ்வதியை திட்டி தாக்கினர். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இதுகுறித்து இரு தரப்பு புகார்களின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார், ராஜா, ரோஜா, சரஸ்வதி, பார்த்திபன் ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X