கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ராஜலட்சுமி முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்..
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 529 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் இன்று நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி, நுாறுநாள் வேலைதிட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களிலும் நடைபெற உள்ள இந்த சிறப்பு முகாமில், 76 ஆயிரத்து 374 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இன்று நடைபெற உள்ள முகாமில் பொதுமக்கள், இளைஞர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக, கள்ளக்குறிச்சி டி.எஸ்.பி., ராஜலட்சுமி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 'கோவிஷீல்டு' முதல் தவணை தடுப்பூசி நேற்று செலுத்திக்கொண்டார். டாக்டர்கள் ஜெகதீஸ்வரன், தேவி, நகராட்சி கமிஷனர் குமரன், பொறியாளர் பாரதி, துப்புரவு ஆய்வாளர் செல்வகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சிட்டிபாபு, கவியரசன் உட்பட பலர் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE