பொது செய்தி

தமிழ்நாடு

இன்று மெகா தடுப்பூசி முகாம் வி.ஏ.ஓ.,க்களுக்கு ஆலோசனை

Added : செப் 12, 2021
Share
Advertisement
செஞ்சி : செஞ்சி தாலுகாவில் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து வருவாய்த் துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது..செஞ்சி தாலுகாவிற்கு உட்பட்ட செஞ்சி, வல்லம் ஒன்றிய பகுதியில் இன்று வருவாய்த்துறை சார்பில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்து 191 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.அதனையொட்டி நேற்று, வி.ஏ.ஓ.,க்கள், கிராம

செஞ்சி : செஞ்சி தாலுகாவில் மெகா தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து வருவாய்த் துறையினருக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது..
செஞ்சி தாலுகாவிற்கு உட்பட்ட செஞ்சி, வல்லம் ஒன்றிய பகுதியில் இன்று வருவாய்த்துறை சார்பில் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்து 191 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.அதனையொட்டி நேற்று, வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செஞ்சியில் நடந்தது.கால்நடைத்துறை இணை இயக்குனர் மனோகரன் தலைமை தாங்கினார். கலால் உதவி ஆணையர் சிவா, டாஸ்மாக் மாவட்ட மேலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். தாசில்தார் ராஜன் வரவேற்றார்.பி.டி.ஓ., கேசவலு, பேரூராட்சி செயல் அலுவலர்கள் செஞ்சி ராமலிங்கம், அனந்தபுரம் ரமேஷ், பேரூராட்சி மண்டல துணை தாசில்தார் வெங்கடேசன், ஆர்.ஐ.,கள் கண்ணன், கீதா, நிர்மல்குமார், சுகாதார ஆய்வாளர் ஏழுமலை உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X