பொது செய்தி

தமிழ்நாடு

வனக்கல்லுாரி மாணவர் போராட்டம் நீடிப்பு

Added : செப் 12, 2021
Share
Advertisement
மேட்டுப்பாளையம்:பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் போராட்டத்தால் வகுப்பை காலவரையின்றி மூடுவதாக, வனக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை, இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண் பல்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி பட்டுப்புழுவியல் துறை வகுப்பு மாணவர்கள், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்

மேட்டுப்பாளையம்:பட்டுப்புழுவியல் துறை மாணவர்கள் போராட்டத்தால் வகுப்பை காலவரையின்றி மூடுவதாக, வனக்கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.பட்டுப்புழுவியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கையை, இரண்டு ஆண்டுகளுக்கு வேளாண் பல்கலை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் வனக்கல்லுாரி பட்டுப்புழுவியல் துறை வகுப்பு மாணவர்கள், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கூறி வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.இதனால், பட்டுப்புழுவியல் துறை இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி வகுப்புகளை, வனக்கல்லூரி நிர்வாகம் காலவரையின்றி மூடுவதாக அறிவித்தது. இதையடுத்து விடுதிகள் அடைக்கப்பட்டன.மாணவர்கள் தங்கள் உடமைகளை எடுத்து வந்து வகுப்பறை கட்டடம் முன் அமர்ந்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் தலைமையில் அதிகாரிகள் பேச்சு நடத்தியும், சுமுக தீர்வு ஏற்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X