அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின்இணைப்பு : அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்

Added : செப் 12, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருநெல்வேலி;''ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,''என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். திருநெல்வேலியில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 18 ஆண்டாக மின் இணைப்பிற்கு பதிவு செய்து 4

திருநெல்வேலி;''ஒரே ஆண்டில் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்,''என, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்தார். திருநெல்வேலியில் மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியதாவது:ஒரே ஆண்டில் 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 18 ஆண்டாக மின் இணைப்பிற்கு பதிவு செய்து 4 லட்சத்து 52 ஆயிரத்து 777 பேர் காத்திருக்கின்றனர்.தேவையான இடங்களில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சூரிய ஒளியை பயன்படுத்தி 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு உற்பத்தி இலக்கு 4 ஆயிரம் மெகாவாட்.அடுத்த 10 ஆண்டுக்கு தேவையான மின்திட்டங்கள் குறித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மின்வாரியத்தில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்களில் 56 ஆயிரம் காலியாக உள்ளது. நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.கடந்த ஐந்து ஆண்டுகளில் மின்துறை செயல்பட்டதா என்ற கேள்விக்குறி எழுகிறது. வட சென்னை அனல் மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன், தூத்துக்குடியில் 71 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பில் குறைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. விசாரணை இறுதி அறிக்கை வந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தமிழகத்திற்கு ஒதுக்குவது தொடர்பாக சட்டசபை கூட்டத்தொடர் முடிந்த பின் தெரிவிக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
12-செப்-202107:17:04 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கூடவே அணில் பிடிக்கும் கூண்டையும் செந்தில்பாலாஜியைத் தரச் சொல்லுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X