இந்தியா

கடுமையான நடவடிக்கையை தவிர்க்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்: கவர்னர்

Added : செப் 12, 2021
Share
Advertisement
புதுச்சேரி : ''புதுச்சேரியில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்'' என கவர்னர் தமிழிசை கூறினார்.ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான 'நியுமோகாக்கல்' தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது;வருங்காலத்தில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும்

புதுச்சேரி : ''புதுச்சேரியில் கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்'' என கவர்னர் தமிழிசை கூறினார்.

ராஜிவ்காந்தி மகளிர் மருத்துவமனையில், குழந்தைகளுக்கான 'நியுமோகாக்கல்' தடுப்பூசி திட்டத்தை துவக்கி வைத்து கவர்னர் தமிழிசை பேசியதாவது;வருங்காலத்தில் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் சூழ்நிலையில் இந்தியா உள்ளது. பாரத் பயோடெக் நிறுவனம், போலியோவுக்கு சொட்டு மருந்து கண்டுபிடித்தது போல், கொரோனாவுக்கும் தடுப்பு சொட்டு மருந்து கண்டுபிடித்து வருகிறது.அது கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் ஊசி, அதற்கான உபகரணங்கள் தேவையில்லை.

வெகுவிரைவில் அனைத்து குழந்தைகளும், பெரியவர்களுக்கும் கொரோனா தடுப்பு சொட்டு மருந்து கொடுத்து விடலாம். இதிலும் இந்தியா முன்னோடியாக திகழ்வதில் மகிழ்ச்சி. மருத்துவத் துறையில் இன்னும் பல முன்னேற்றங்களை செய்ய வேண்டும்.இரு தினங்களுக்கு முன்பு கோவா முதல்வரை சந்தித்தேன். அப்போது, கோவா 100 சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாறிவிட்டதாக கூறினார். அவர்களை பிரதமரும் நேற்று பாராட்டியுள்ளார். புதுச்சேரியில் 65 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டப்பட்டுள்ளது. வெகுவிரைவில் 100 சதவீதத்தை எட்டும் வகையில் சுகாதாரத் துறை மிக தீவிரமாக பணியாற்ற வேண்டும்.கனடா போன்ற நாடுகளில் கொரோனா நான்காவது அலை வந்துவிட்டது. அதை அவர்கள் தைரியமாக எதிர்கொள்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் தடுப்பூசி போட்டுவிட்டனர்.பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு, கட்டாய விடுமுறை அளிக்கப்படும் நிலை உள்ளது.

புதுச்சேரியில் சில கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்பு அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும்.தடுப்பூசி போட்டுக் கொள்வது அவர்களை பாதுகாத்துக் கொள்வதற்காக மட்டுமல்ல, மற்றவர்களை பாதுகாப்பதற்கும் தான்.தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற அரசு செலவு செய்கிறது. மனித நாட்கள் வீணாகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் ஐ.சி.யு., தேவையில்லை. அதனால் விடுபட்டவர்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்குள், புதுச்சேரியை 100 நூறு சதவீதம் தடுப்பூசி போட்ட மாநிலமாக மாற்ற செயலாற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X