பொது மன்னிப்பு கோரும் தினம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொது மன்னிப்பு கோரும் தினம்

Added : செப் 12, 2021
Share
திண்டிவனம் : பொது மன்னிப்பு கோரும் தினத்தையொட்டி, திண்டிவனத்தில் ஜெயின் சமூகத்தினரின் நகைக் கடைகள் மட்டும் நேற்று அடைக்கப்பட்டன.விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் தினத்தை பொது மன்னிப்பு கோரும் தினமாக நாடு முழுதும் உள்ள ஜெயினர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த நாளில் தங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கோரும்

திண்டிவனம் : பொது மன்னிப்பு கோரும் தினத்தையொட்டி, திண்டிவனத்தில் ஜெயின் சமூகத்தினரின் நகைக் கடைகள் மட்டும் நேற்று அடைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் தினத்தை பொது மன்னிப்பு கோரும் தினமாக நாடு முழுதும் உள்ள ஜெயினர்கள் கடைபிடித்து வருகின்றனர். இந்த நாளில் தங்களுக்கு தெரிந்தோ, தெரியாமலோ யாராவது பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களிடம் மன்னிப்பு கோரும் விதமாக அன்றைய தினம் தங்களின் கடைகளை ஒரு நாள் அடைத்து விடுமுறை விடுகின்றனர்.அதையொட்டி நேற்று விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் உள்ள ஜெயின் சமூகத்தினர் நடத்தி வரும் நகைக் கடைகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு கதவில், பொது மன்னிப்பு கோரும் தினம் என அச்சடிக்கப்பட்ட நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X