பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: 'சுருட்டிய' கை சும்மா இருக்குமா?

Updated : செப் 12, 2021 | Added : செப் 12, 2021 | கருத்துகள் (44)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:கே.நாகலட்சுமி, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க.,வை கைப்பற்ற பல்வேறு விதமாக காய்களை நகர்த்தி வருகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், 'கட்சியை காப்பாற்ற வேண்டும்' என்ற எண்ணமாம்.ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது,
சசிகலா, சுருட்டல், கை, சும்மா, இருக்குமா, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்:



கே.நாகலட்சுமி, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அ.தி.மு.க.,வை கைப்பற்ற பல்வேறு விதமாக காய்களை நகர்த்தி வருகிறார். அதற்கு அவர் சொல்லும் காரணம், 'கட்சியை காப்பாற்ற வேண்டும்' என்ற எண்ணமாம்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அவருக்கு கிடைத்த கெட்ட பெயர்களில் முக்கியமானது, 'மன்னார்குடி' கும்பலின் அராஜகம் கட்சியில் அதிகமாக இருக்கிறது என்பது தான்.சசிகலா சிறை சென்றது, நம் நாட்டு விடுதலைக்காக போராடி அல்ல; வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்திற்காக என்பதை யாரும் மறக்கவில்லை.

சிறையிலும் லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார் என்பதில் இருந்து புரிந்து கொள்ளலாம், அவர் மாறவில்லை என்பதை!எம்.ஜி.ஆர்., உருவாக்கிய, ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க.,வை சசிகலா வந்து தான் காப்பாற்ற வேண்டுமா?அரசியலுக்கு வர ஆசை இருந்தால், அவருக்காகவே துவங்கப்பட்ட அ.ம.மு.க.,வில் சேரலாமே!


latest tamil news


ஆனால் அப்படி அவர் செய்ய மாட்டார். அ.ம.மு.க., என்பது அவர்களின் குடும்ப கட்சி. அவர்கள் பணத்தை அவர்களே கொள்ளையடிக்க முடியாது; மேலும், மக்கள் செல்வாக்கு இல்லாத கட்சி! ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது சேர்த்த சொத்துக்களுக்கு தொடர்ந்து பிரச்னை வந்தபடியே இருக்கிறது.

அதிலிருந்து தப்பிக்க, அ.தி.மு.க., போன்ற வலுவான கட்சிக்கு தலைவராக வேண்டும் என்பதே சசிகலா தரப்பின் எண்ணமாக இருக்கிறது. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்க முடியாது எனும் போது, 'சுருட்டிய' கை மட்டும் சும்மா இருக்குமா?

Advertisement




வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
13-செப்-202104:21:59 IST Report Abuse
meenakshisundaram கோபாலபுரம் - மன்னார்குடி எது முதல்? விரைவில் சன் டிவி பற்றி மன்றம் நடத்த வேண்டும்
Rate this:
Cancel
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-செப்-202101:21:40 IST Report Abuse
DARMHAR காமராஜருடன் போனது தமிழ் நாட்டின் நல்லாட்சி..அதற்கப்புறம் யார் முதல்வராக வந்தாலும் ஊழல் ஆட்சி தான்.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
13-செப்-202100:35:56 IST Report Abuse
Aarkay ஜெ போல dressing என்ன? நம் தலையெழுத்து நாலாப்பு படித்த மேதைகளெல்லாம்தான் நம்ம சி எம். மாயாக்கா, சொர்ணாக்கா(aka, தீதி) வரிசையில் இன்னுமொரு அக்கா....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X